பக்கம்:அறநெறி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அறநெறி

3. எண்ணித் துணிக

சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் (குறள்-664)

என்பது திருவள்ளுவர் வாக்கு. எதைப்பற்றியும் பேசி, விடுவது எளிது. ஆ ன ா ல் பேசியவற்றிற்குச் செயலுருவம் தருவதென்பது அரிய .ெ ச ய ல ா கி விடுகின்றது. மனம் எண்ணுகின்றது; எண்ணிய எண்ணம் சொல்லாகிச் செயலாக வெளிப்படுகின்றது; அறிவு சிறந்திருந்தால் நல்லதைச் சிந்திக்க முடியும்; “நல்லவே எண்ணவேண்டும்; எண்ணிய முடிதல்வேண்டும்” என்பார் பாரதி. பலர் இன்று போற்றப்படுவதற்குக் காரணம் அவர்கள் ஆற்றிய செயல்களால்தான். ஒருவன் முன்னேற்றத்தை அளந்து காணும் கருவியாக அவர் ஆற்றும் செயல்கள் அமைகின்றன.

சொன்ன சொல்லைச் செயலாக்கும்பொழுதுதான் இடர்ப்பாடே தொடங்குகின்றது. முதலாவது எண்ணிய எண்ணம் செயல் வடிவம் பெற எவ்வெவ் வகையில் முயலலாம் என்பது முடிவு செய்யப்பட வேண்டும். ஒரு செயல் என்னும் வெற்றித் தூணைச் சென்றடை வதற்குப் பல வழிகள் அமையலாம், அவற்றில் எந்த வழி எளியதும் முறையானதும் சி ற ப் பு ைட ய து ம் ஆகும் என்பதைக் காணவேண்டும். பின் விளைவுகளை யும் எப்போதும் க ரு த் தி ல் கொள்ளவேண்டும். செயலாற்றும்போது நேரக்கூடிய விளைவுகளையும் நன்கு சிந்திக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/72&oldid=586967" இலிருந்து மீள்விக்கப்பட்டது