பக்கம்:அறநெறி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அறநெறி

அரிதாகக் கிடைத்த செல்வத்தையும் பிறர்க்கும் வழங்கி வாழ வேண்டும் என்னும் உயரிய கருத்தை உள்ளடக்கிய இப்பாடலைப் படிக்கும்பொழுது திருவள்ளுவர் சொல்லிய

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம்.தலை

-(குறள்-322)

என்னும் திருக்குறள் நினைவுக்கு வருகின்றது அன்றோ!

2. உலகம் ஒரு குடும்பம்

“எதிர்காலத்தில் நம்முடைய சிந்தனைகள் உலகம் அளவியதாக இருக்கவேண்டும்” என்று “ஒரே உலகம்” என்னும் நூலில் அமெரிக்கப் பேரெழுத்தாளரான வெண்டல் வில்கீ என்னும் அறிஞர் குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டில் எழுந்த இந்தக் கருத்தை அமெரிக்கர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார். கள். ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி"யினரான தமிழ் மக்கள் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்னும் பரந்துபட்சிந்தனையில் வாழ்ந்தவர்கள் என்பதற்கு,

யாதும் ஊரே யாவரும் கேளிர் - என்ற கணியன் பூங்குன்றனாரின் கவிதை அடியே சான்று பகரும். திருவள்ளுவரும்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

(குறள் 397)

என்றார் குறளில். கற்ற ஒருவனுக்கு எல்லா நாடுகளும், எல்லா ஊர்களும் உரிமையுடையன; அவன் கற்ற கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/80&oldid=586980" இலிருந்து மீள்விக்கப்பட்டது