18
அறப்போர்
திருச்செங்கோட்டார், அன்று---இன்று, இந்தியாவின் கவர்னர்---ஜெனரல்! அறிவோம். இரண்டுக்கும் உள்ள தாரதம்மியமும் அறிவோம்.
ஆச்சாரியாரின் மருகர், பெர்லினில் விருந்துண்கிறார்---லண்டனில் பேசுகிறார்--- அறிவோம்---அதனால் அவர் ஆனந்தமடைவார்---அவருடைய இனத்தவர் பூரிப்படைவர்--புல்லேந்தும் பரம்பரை என்று எண்ணாதீர்--பாரீர், பாரெங்கும் எமது ஆதிபத்யம் பரவுகிறது என்று உளறிக்கொட்டும் அளவுக்குச் சில 'பிரகிருதிகள்' பித்தம் பிடித்து அலைகின்றன என்பதையும் அறிவோம்.
கவர்னர்களாய்---அமைச்சர்களாய்-—தூதுவர்களாய் துரைமார்கள் காலி செய்து விட்டுப்போன வெல்வெட்டு மெத்தைகளில் கொலு வீற்றிருப்பவராய், காங்கிரஸ் தலைவர்கள், பலமும் புதிய நிலையும் பெற்றுள்ளனர் என்பதையும் அறிவோம்.
அகில உலகிலும் அவர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்---தெரியும் அதுவும்.
ஆளவந்த அவர்கள், அவர்களை ஆட்களாக்கி விட்ட அண்ணல் காந்தியாரைப் படுகொலைக்கு ஆளாகவிட்ட, அசகாய சூரர்கள்---இதை நாம் அறிவோம்; அவர்கள் அறியார்!
அகிம்சையை, வாழ்க்கைக்கும் நாட்டு ஆட்சி முறைக்கும் ஏற்ற, அசைக்கமுடியாத திட்டம் என்று அல்லும் பகலும் அனவரதமும் பேசிக்கொண்டிருந்தவர்கள், அடி, உதை கொடுத்தும்--ஆள்தூக்கிச் சட்டம் போட்டும் பத்-