பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அறப்போர்



ஆள் இல்லை. அந்த அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. கம்யூனிஸ்டுகளையோ, வேட்டையாடி ஒழித்துவிடுவது என்ற அகில உலக திட்டத்தின்படி, இங்கேயும் ஏறக்குறைய அடக்கியாகிவிட்டது பாட்டாளிகளுக்கும் உழவர்களுக்கும் பகல் பட்டினியும் இராப் பட்டினியும் மாலை நேரத்தில், காமராஜ், சர்தார் வேதரத்னம் ஆகியோரின் உபதேசமும் இருந்து வருகிறது. போலீசும் பட்டாளமும் இருப்பது போதாதென்று, புதிய புதிய அவசரச் சட்டமும் போட்டு ஆட்சியாளர்கள், புதிய பலம் தேடிக்கொண்ட வண்ணம் உள்ளனர்.

பாமர மக்களிடம் பயமும் பாசமும் ஏற்படுத்தி, முக்கியமான பிரச்சினைகளை மூடிவைக்கத் தந்திரம் செய்து, காஷ்மீரைக் கவனி! நிஜாம் போகிற போக்கைக் கவனி!' என்று கூச்சல் குண்டுகளை வீசுகின்றனர். காஷ்மீர் பிரச்சினை கலக்கத்தையும், நிஜாம் போக்கு கவலையையும் தருவது உண்மையானால், இவைகள் முன்னால் இருக்கும்போது, ஏன், மூலையில் கிடக்கும் இந்தியைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டு கூத்தாடவேண்டும்? முக்கியமான பிரச்சினைகளைக் கவனிக்கவேண்டாமோ?

போதுமான அரிசி இல்லை; கேட்டால், 'மக்காச் சோளம் தின்னு' என்கிறார் மந்திரியார்.

'ஏனய்யா அரிசி கிடைக்கவில்லை?' என்று கேட்டால், 'மழை இல்லை' என்று கூறுகிறார் காங்கிரஸ் தலைவர்.

'ஏனய்யா, மழை இல்லை?" என்று கேட்டு, முதலமைச்சர் தாமாகவே ஓர் விசித்திரமான காரணமும் கூறிவிட்டார். ஒழுக்கம் இல்லை, எனவே மழை இல்லை--இது முதலமைச்-