பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அறப்போர்



தீர்மானிப்போம். அப்போரில் வெற்றிகாண இங்கு கூடியுள்ள நமது பெரும் பெரும் தலைவர்களின் ஆசியை முதலில் பெறுவோம்.

ஆட்சியாளர்கள் தமிழின் இனிமையைக் குறைப்பதற்காகவோ, அல்லது அதன் தொன்மையை மறைப்பதற்காகவோ, அல்லது அதைப் பழிப்பதற்காகவோ இன்று ஹிந்தியை இந்நாட்டில் நுழைக்கவில்லை. அப்படி இருந்தால் இனிமைத் தமிழ் நிறைந்த கம்பராமாயணத்தையே, தொன்மை மிகுந்த தொல்காப்பியம் போன்ற நூல்களையே அழிக்கத் துணிந்திருப்பார்கள்.

தமிழனுடைய பண்பை அழிக்க அவனது கலாசாரத்தை அழிக்க, தமிழ் மக்களிடத்து இன்று ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியை ஒழிக்க இவற்றிற்காகத்தான் இந்தியை நுழைக்கிறார்கள். எனவேதான் ஆட்சியாளரின் குறி 'இராவண காவியத்தின் மீது சென்றிருக்கிறது. ஆகவே, நமது கலாச்சாரத்தில் கைவைக்கத் துணிந்த இந்த அரசாங்கத்தினரின் போக்கை எதிர்த்து அறப்போர் தொடுப்பது தான் முறை.

தமிழ் காக்கும் பணி

கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் பலமுறை சட்டம் மீறிய சிவஞான கிராமணியாரும் பக்கலில் இருக்கிறார், நமக்குத் தைரியம் கூற. ஒரே அரசியல் கருத்துக்கொண்ட இரு தலைவர்கள் இங்கு காண முடியாது என்றாலும், தமிழ் காக்கும் பணியில் எல்லோரும் ஒரே கருத்துடன்தான் இன்று கூடியுள்ளார்கள். இப்படி நேரிடுவது தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் ஒரு புதுமைதான். அவசியம் ஏற்பட்டபோது