பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அறப்போர்


பிரெஞ்சுப் புரட்சி---ஞாபகமிருக்கட்டும்!

எனவே, பழையபடி பள்ளி முன்புதான் மறியல் செய்யவேண்டும். பெரியார் அவர்கள் கூறியிருக்கிறார்கள், இம்முறை புதிய புதிய அடக்குமுறைகள், மிருகத்தனமான அடக்குமுறைகள் கையாளப்படுமென்று. நாமும் புதுப்புது அனுபவம் பெறத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம். ஏற்கனவே, நாம் பஞ்சைகள். அதோடு பஞ்சம் வேறு நம்மை வாட்டி வருகிறது; எனவே நம்மிடத்தில் நமது எலும்புக் கூடுதான் மிச்சம் இருக்கிறது. அதை சர்க்கார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டுமே. சர்க்கார் நினைக்கலாம், வெறும் எலும்புக்கூடுகளான இவர்களால் என்ன செய்ய இயலும்! அப்படி நினைப்பார்களானால் பிரெஞ்சு தேசப் புரட் சியைப் பற்றிய வரலாற்றைப் படித்துப் பார்க்கட்டும்! அப்போது புரியும், எலும்புக் கூடுகள் என்ன செய்யும் என்பது! வெறும் எலும்புக் கூடுகள், தசையிலுள்ள ரத்தத்தை யெல்லாம் உறிஞ்சி உறிஞ்சி உரம் ஏறிக்கொண்ட எலும்புக் கூடுகள். இவற்றிற்கு எதையும் எதிர்த்து நிற்கும் சக்தி யுண்டு. வறுமையால் வாடிய எலும்புக் கூடுகள், அதுவும் அற்ப எலும்புத் துண்டுக்காகக் கனவான்களின் நாய்களோடு போராடிய எலும்புக் கூடுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்துதான் புரட்சி செய்து பிரான்சு தேசத்தில் முடியாட்சியை, அழித்து குடியாட்சியை ஏற்படுத்தியது என்பதை ஆட்சியாளர்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வந்து பார்க்கட்டும்! அன்று ஒரு சொக்கலிங்கம் எழுதினார், இந்த நகரத்தில் போலீசும் செத்துவிட்டதோ' என்று. இன்று அதே சொக்கலிங்கம் எழுதத் துணிவாரா அப்படி? அது திராவிட நாடு என்ற நினைப்பே இல்லாத காலம். நம்மை விட்டு மிட்டா மிராசுகள் ஓடாத காலம். இன்று