மறப்பது எப்படி ?
அதிகமாக நினைந்து வாழ்த்தத் தோன்றுகிறது.
புலவர் ஒருவாறு சொல்லி நிறுத்தினர். அருகில் இருந்தவர்கள் கேட்டு வியந்தார்கள். "மன்னர்பிரானுடைய இயல்பை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால் மூலங்கிழார் அதை எடுத்துச் சொல்லும் பொழுது அழகாக இருக்கிறது. எங்கள் உள்ளம் குளிர்கிறது என்றார் அங்கிருந்த அமைச்சர்களில் ஒருவர்.
“மன்னர்பிரான் கேட்ட கேள்விக்கு விடை கூறும் வாயிலாகப் பேசும் பேச்சிலே இத்தனே அழகு இருக்குமானால், இப்புலவர் பிரான் இதையே கவிதையாக வழங்கினால் எப்படி இருக்கும்!” என்றார் மற்ரறோர் அமைச்சர்.
இயல்பாகவே ஊக்கம் மிகுதியாக இருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு இந்த வார்த்தை கவிதை பாடும் உணர்ச்சியைக் கிண்டிவிட்டது. உடனே அவரிடமிருந்து மலர்ந்தது ஒரு பாட்டு.
வரைபுரையும் மழகளிற்றின்மிசை
வான்துடைக்கும் வகையபோல
விரவுஉருவின கொடிதுடங்கும்
வியன்ருனே விறல்வேந்தே !
நீ, உடன்றுநோக்கும்வாய் எரிதவழ
89