பக்கம்:அறப்போர்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


ஔவையார் தமக்குத் தாமே நகைத்துக் கொண்டார். மறுபடியும் நெஞ்சை வேறாக வைத்துப் பேசலானார்.

‘இத்தனை நாள் பழகி அதியமானுடைய சீரிய இயல்புகளை அறிந்தும் உனக்கு இந்த எண்ணம் ஏன் வந்தது? இதற்கு முன்னாலே நாம் இவ்விடத்திலே கண்ட காட்சிகளை நினைத்துப் பார். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல நாள் அடுத்தடுத்து வந்தாலும் அவன் சிறிதாவது சலித்துக் கொண்டானா? இன்னும் பலரைக் கூட்டிக் கொண்டு வந்தோமானாலும் அவன் வள்ளன்மையிலே ஏதேனும் குறைவு நேர்வதுண்டா? நினைத்துப் பார். அப்படி அடுத்தடுத்து வரும்போது அவனுடைய அன்பு மற்ற இடங்களைப்போல ஒரு நாளுக்கு ஒரு நாள் அளவிற் குறைந்தா வந்தது? முதல் நாள் எத்தனை விருப்பத்தை உடையவனாக இருந்தானோ அதே விருப்பத்தைப் பல நாள் அடுத்தடுத்துச் சென்றாலும் காட்டும் இயல்புடையவனையா இப்படி நினைத்தாய்!

‘அவனுக்கு என்ன குறைவு? அழகான அணிகலங்களை அணிந்த யானைகளும் வேகமாகச் செல்லும் தேர்களையும் உடையவனல்லவா அவன்? புலவர்களுக்குக் கொடுக்க இயலாத வறுமையா வந்து விட்டது? அதிய-

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/120&oldid=1267492" இலிருந்து மீள்விக்கப்பட்டது