பக்கம்:அறப்போர்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




அறப்போர்



புறநானூற்றில் முதல் 266 பாடல்களுக்கு மட்டும் பழைய உரை ஒன்று உண்டு. அதை எழுதியவர் இன்னாரென்று தெரியவில்லை. தமிழ் நாட்டின் பழம் பெருமையை யும் வரலாற்றையும் விளக்கும் இந்த அரிய நூலைத் தேடிக் கண்டுபிடித்து ஆராய்ந்து பதிப்பித்த அருஞ் செயலைச் செய்தவர்கள் என் ஆசிரியப்பிரானாகிய மகாமகோபாத் தியாய டாக்டர் ஐயரவர்கள் புறநானூறு வெளி வந்தது முதல் இதுவரையில் அந் நூலைத் துணையாகக் கொண்டு அறிஞர்கள் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சி நூல்கள் பல சரித்திர நூல்கள் பல; கதைகள் பல. இன்னும் விரிவான ஆராய்ச்சிக்கு இடம் கொடுக்கும் அரிய செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன. தமிழ் நாட்டின் இலக்கிய வளமும், வரலாற்றுச் செல்வமும், கவிநுகர் திறமும், பழம்பெருமை யுணர்ந்துகொள்ளும் பெருமிதமும் அந்த நூலால் எத்தனையோ படிகள் மேலோங்கி விட்டன என்பது தமிழர்கள் நன்குணர்ந்த செய்தி. இதற்கு மூலமான அருந்தொண்டைப் புரிந்த தமிழ்க் கற்பகமாகிய என் ஆசிரியப்பிரானைத் தமிழ் நாடு என்றும் மறக்க இயலாது என்பது முக்காலும் உண்மை.

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
கால்மெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே”

என்று பாரதியார் பாடிய பாட்டும் அதைத்தானே சொல்கிறது?

சங்கநூற் காட்சிகள் என்ற வரிசையில் இது ஐந்தாவது புத்தகம். இதற்குமுன் வந்த நான்கும் அகப்பொருளேப் பற்றியவை. இது புறப்பொருளைப் பற்றியது. ஆகவே அந்தப் புத்தகங்களில் உள்ள கட்டுரைகளின் போக்குக்கும்

xii
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/16&oldid=1267392" இலிருந்து மீள்விக்கப்பட்டது