முகவுரை
இதில் உள்ள விளக்கங்களின் போக்குக்குமிடையே சில வேறுபாடுகள் இருக்கக் காணலாம். செய்யுட்களின் உரைகளில் பழைய உரையாசிரியர் உரைக்கு வேறுபட்ட பகுதிகள் சில இருக்கும். சில இடங்களில் அவர் இரண்டாவதாக ஓர் உரை எழுதுகிறர். அந்த உரை சிறப்பாகத் தோன்றியதால் அதையே தழுவி விளக்கம் எழுதிய சில இடங்களும் உண்டு. இதிலே வரும் மன்னர்கள், புலவர் களைப்பற்றிய செய்திகள் அனைத்தையும் தொகுத்துத் தருவதானால் மிக விரியுமாதலால், பாட்டின் விளக்கத்துக்குப் போதிய அளவில் அவற்றைக் கொடுத்திருக்கிறேன்.
இதற்குமுன் வெளிவந்த புத்தகங்களை ஆதரித்துப் பாராட்டிய அன்பர்கள் இதனையும் இனி வர இருக்கும் நூல்களையும் பெற்று ஊக்குவிப்பார்கள் என்றே நம்புகிறேன். எளியேனனையும் இத்தொண்டில் ஈடுபெறச் செய்த முருகன் திருவருளையும் என் ஆசிரியப்பிரான் ஆசியையும் சிந்தித்து வந்திக்கின்றேன்.
மயிலை
கி.வா. ஜகந்நாதன்
.
1-8-52
பக்கம் | வரி | பிழை | திருத்தம் |
24 | 10 | பேரறங்களை | போரறங்களை |
48 | கடைசி இரண்டு வரிகளை நீக்கிவிடுக, | ||
60 | 11 | பருவத்ன | பருவத்தை |