பக்கம்:அறப்போர்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தனி மனிதனுடைய விருப்பு வெறுப்பு அன்று; ஒரு சமுதாயத்தினரின் நன்மை தீமைகளை எண்ணியே போர் நிகழ்கிறது. உவகத்தில் எந்த நாடும் போர் செய்யாமல் இருந்ததில்லை. தனி மனிதனுடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் ஒரு நாட்டின் சரித்திரத்துக்கும் அடிப்படையான வேறுபாடு இது. மனிதன் தன்னுடைய ஆற்றலால் கல்வி, செல்வம் ஆகியவற்றை ஈட்டி உயர்கிறான். அவனுடைய ஜீவிய சரித்திரத்தில் அவன் செய்த ஆக்க வேலைகளே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. ஆனால் தனி மனிதர் பலர் சமுதாயமாக வாழும் நாட்டினது சரித்திரத்தைப் பார்த்தாலோ போர்ச் செயல்களே சிறப்பான பகுதிகளாக இருக்கின்றன. சரித்திரம் என்பதே போர் நிகழ்ச்சிகளின் கோவை என்றுகூட மாணாக்கர்கள் நினைத்துப் படிக்கும் அளவுக்குச் சில நாட்டு வரலாறுகள் அமைந்திருக்கின்றன.

போரில் ஈடுபடுபவனும் மனிதன் தான். ஆகவே அதிலும் அவன் தன் அறிவைப் பயன்படுத்திக் கொள்கிறான். பகைவர்களை எளிதிலே மாய்க்கும் படைகளைக் கண்டுபிடிக்கிறான். அவனுடைய கல்வி, செல்வம், மனித சக்தி எல்லாம் போரில் ஈடுபடுகின்றன.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/34&oldid=1267407" இலிருந்து மீள்விக்கப்பட்டது