அறப்போர்
திட்டம் இருந்தது. இராமாயணப் போரில் இராமன் வெறுங்கையுடன் நின்ற இராவணனைக் கொல்லாது, "நாளை வா” என்று கூறி அனுப்பியது அறச்செயல். இத்தகைய பல அறச்செயல்கள் போரிடையிலும் நிகழ்வதால் அது போரேயானாலும் அறப்போராக இருந்தது.
தமிழ் நாட்டில் நிகழ்ந்த போர்களும் அறப்போர்களே. அவற்றிற்குரிய வரையறைகளைப் புலவர்கள் அமைத்தார்கள். எவரேனும் வரையறை கடந்து போர் செய்தால் அவர்களைப் புலவர்கள் பாடமாட்டார்கள். அவர்களுடைய பழி பரவி மற்றவர்களை அஞ்சச் செய்யும். சில இடங்களில் சில கொடுஞ் செயல்கள் நிகழ்ந்ததுண்டு. ஆயினும் பெரும்பாலும் அறப்போர்களே நிகழ்ந்து வந்தன. போர் செய்யும் போது படை இல்லாதவனையும், ஒத்த படை கொள்ளாதவனையும், புறமுதுகு காட்டினவனையும், சோர்வுடையவனையும் எதிர்த்துப் பொருவது அறமன்று என்ற வரையறை இருந்தது. சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடிபிறக்கிட்டோனையும் பெண் பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்த படை எடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும், கூறிப்
21