பக்கம்:அறப்போர்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


வெறும் அலங்காரமாக வருவன அல்ல. எல்லாம் ஆண் யானைகள்; ஆண்மையிலே சிறந்த யானைகள்; பகைவரைத் துகைத்துக் கொல்லும் களிறுகள். அவற்றின் மேலே கொடிகளே நாட்டியிருப்பார்கள். யானையின் பெரும்படை முன்னே செல்லும்போது அவற்றின் மேலே ஏற்றிய கொடிகள் வானை மறைக்கும். எங்கும் நிழலைப் பரப்பும்.

இவற்றை யெல்லாம் நினைத்தார் புலவர். போர் செய்யப் புகும்போதும் அறத்தாற்றை நுவலும் அவன் கொள்கையையும், அவனுடைய படைப் பெருமையையும் கூறி, “நீ வாழ்வாயாக!” என்று வாழ்த்தப் புகுந்தார்.

ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணிஉடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும்; நும்அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி!

முதுகுடுமிப்பெருவழுதியை எப்படி வாழ்த்துவது! அவனுக்கு மேலும் மேலும் வெற்றி உண்டாக வேண்டுமென்று வாழ்த்தலாம். எல்லா இன்ப நலங்களும் கிடைக்க வேண்டுமென்று

32
32
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/50&oldid=1460088" இலிருந்து மீள்விக்கப்பட்டது