பக்கம்:அறப்போர்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பெற்றது என்று சில உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். நிலம் தோன்றுவதற்கு முன்னே தோன்றியது என்ற பொருள்பட முன்னீர் என்றும் சொல்வதுண்டு.

முதுகுடுமியை வாழ்த்துகிறார் புலவர்; “உங்களுடைய குலத்தில் பேரரசனாக இருந்தவனும், செம்மையான பசிய பொன்னைக் கூத்தர்களுக்கு வழங்கியவனும், கடலை அடைந்து விழா வெடுத்த முந்நீர் விழாவை உடையோனும், நெடியோனுமாகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய, நல்ல நீரை உடைய பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் நீ வாழ்வாயாக!” என்று வாழ்த்துகிறார்.

ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அறுங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பொஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் தும் அரண் சேர்மின்' என,
அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி: தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்தீர் விழவின் நெடியோள்
தன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே,

‘பசுக்களும், பசுவின் இயல்புடைய அந்தணர்களும்; மகளிரும், நோயுடையவர்களும், போற்றித் தென் திசையில்

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/57&oldid=1267430" இலிருந்து மீள்விக்கப்பட்டது