பக்கம்:அறப்போர்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


வாழ்பவராகிய பிதிரர்களுக்குச் செய்யவேண்டிய அரிய கடன்களைக் கொடுக்கும் உரிமையுடைய செல்வத்தைப் போன்ற பிள்ளைகளைப் பெறாதவராகிய நீங்களும், நாம் எம் அம்பை விரைவிலே எய்யப்போகிறோம் ஆதலின், நுமக்கு ஏற்ற பாதுகாப்பான இடங்களை நாடி அடையுங்கள் என்று அறத்தின் நெறியை வெளிப்படையாகக் கூறும் கொள்கையையும் வீரத்தையும் உடையவனும் போர்க்களத்தில் பகைவரைக் கொல்லும் களிறுகளின் மேலே ஏற்றிய கொடிகள் ஆகாயத்தை நிழல் செய்யும் எம்முடைய அரசனுமாகிய முதுகுடுமிப் பெருவழுதியே! நீ வாழ்வாயாக; பாண்டிய குலத்து அரசனும் செம்மையான இயல்புடைய பசும் பொன்னைக் கூத்தர்களுக்கு வழங்கியவனும் கடல் விழாவை நடத்தியவனும் நெடியோனுமாகிய கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய நல்ல நீரையுடைய பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள், மணலினும் பல வாழிய என்று கூட்டிக் கொள்ள வேண்டும்.

இயல்-இயல்பு. ஆ முதலியவற்றை முன்னிலைப்படுத்திச் சொல்வதுபோல அமைந்திருப்பதால் பிணியுடையீரும் பெறா அதீரும் என்பவை முன்னிலையாக இருக்கின்றன. பிணியுடையவர்களாகிய நீங்களும், பெறாதவர்களாகிய நீங்களும் என்று பொருள் கொள்ளவேண்டும். தென்புல வாழ்நர்-பிதிரர்; இவர் தேவ சாதியினர். அவரவர்கள் தம் முன்னோரைக் கருதி ஆற்றும் கடன்களை ஏற்று, அவற்றின் பயன்களை அம் முன்னோர் எவ்விடத்து எப்பிறவியில் இருந்தாலும் அவர்களுக்குச் சார்த்தும் செயலையுடைவர்கள். மாடாகப் பிறந்த ஆன்மாவை நோக்கி அதன் முற்பிறப்பில் தொடர்புடையார் கடன் ஆற்றினால் அதன் பயனைத் தென்புல வாழ்நராகிய பிதிர் தேவதைகள் ஏற்று, அந்த மாட்டுக்கு உரிய புல்லுணவாகவும் பிறவாகவும் கிடைக்கும்படி செய்வார்கள் என்று சாத்திரங்கள் கூறும். இறுக்கும் அளிக்

40
40
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/58&oldid=1460089" இலிருந்து மீள்விக்கப்பட்டது