பக்கம்:அறப்போர்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெற்ற பரிசில்

பழந்தமிழ் காட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களில் தலைமை பெற்றவர்கள் சேர சோழ பாண்டியர்களாகிய மூவர். அந்த மூவரும் வேறு எந்த மன்னர்களுக்கும் இல்லாத சிறப்பை உடையவர்கள். முடியை அணியும் உரிமை அவர்களுக்குத்தான் உண்டு. மற்ற மன்னர்கள் முடி அணிவதில்லை. அதனல் சேர சோழ பாண்டியர்களை முடியுடை மூவேந்தர் என்று சொல்வார்கள்.

அவர்கள் வீரத்தாலும் ஈகையாலும் புகழ் பெற்றவர்கள். புலவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேண்டிய பரிசில்களே வழங்கி, அவர்கள் பாராட்டிப் பாடும் பாடல்களைப் பெற்றவர்கள். புலவர் பாடும் புகழ் இல்லாதவர்கள் மக்களால் இகழப் பெற்றனர். சில மன்னர் கள் தாமே புலமை மிக்கவர்களாகவும் இருந் தனர். பாலேபாடிய பெருங்கடுங்கோ என்ற சோனும், பாண்டியன் நெடுஞ்செழியனும், கிள்ளிவளவனும் போன்ற முடியுடை வேந்தர் கள் புலவர்களாகவும் விளங்கினர். அவர்கள் பாடிய பாடல்கள் பழந்தமிழ்த் தொகை நால்களில் இருக்கின்றன.


42
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/60&oldid=1265866" இலிருந்து மீள்விக்கப்பட்டது