அறப்போர்
பாதுகாப்பாக இருந்த அவை பகைவர்களுக்குத் துன்பத்தைத் தருவனவாக இருந்தன. பகைவர்கள் கண்டாலே அஞ்சி நடுங்கும் பொறிகளை அந்த அரண்களில் வைத்திருந்தார்கள். அவை கொடிய அரண்கள்; வெம்மையான அரண்கள்; வெப்புடைய அரண்கள்.
மற்ற மன்னர்கள் எல்லாம் கண்டு அஞ்சிய அந்த அரண்களையும் அவற்றினுள்ளே வாழ்ந்த பகைவர்களையும் சேரமான் கண்டு அஞ்ச வில்லை. தன்னுடைய விறலைப் புலப்படுத்த அவ்வரண்கள் கருவியாக உதவும் என்ற ஊக்கத்தையே கொண்டான். ஒரு சிங்கவேறு யானைக் கூட்டத்தைக் கண்டால் எழுச்சி பெற்று அதனை அழித்துவிடுவது போலச் சேரமான் அந்த அரண்களே அழித்தான். பகைவர் பலர் புறங்காட்டி ஓடினார்கள். சேரமான் வெற்றி பெற்றான். மிக்க வலிமையையுடைய பகைவர்கள் தோல்வியுற்றார்கள்.
இந்தப் போரிலே உண்டான வெற்றியினால் பலர் பல பொருளைப் பெற்றனர். முக்கியமாக் மூன்றுபேர் என்ன என்ன பெற்றார்கள் என்பதை இளவெயினியார் சொல்கிறார்.
சேரமான் பகைவர்களிடமிருந்து பல பொருளைப் பெற்றான். ஆனால் அவற்றைத்