பக்கம்:அறப்போர்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


கலைகளில் நுட்பமான பகுதிகளை அறிந்து சுவைத்துக் கொண்டிருந்தான் அரசன். பாட்டும் கூத்தும் முடிந்த பிறகு அந்த நுட்பங்களை எடுத்துக் கூறிப் பாராட்டினான். பாணரும் விறலியரும் அரசனுடைய கலையறிவை உணர்ந்து மகிழ்ந்தனர். கலையுணர்ச்சியில்லாதவர் வானளாவப் புகழ்ந்தாலும் கலைஞர்களுடைய உள்ளம் குளிர்வதில்லை. கலை நுட்பம் தெரிந்தவர்கள் தலையை அசைப்பது ஒன்றே அவர்களுக்கு மிக்க ஊக்கத்தை உண்டாக்கும். அப்படி இருக்க, கலை நுட்பம் அறிந்து பாராட்டிப் பரிசிலும் வழங்கும் மன்னனிடம் அவர்களுக்கு அளவற்ற மதிப்பு உண்டாவது இயற்கைதானே?

பாணர்கள் மன்னனிடம் விடை பெற்றுச் சென்ற போது தம்முள்ளே அவனைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். “நம் அரசர் பிரானுடைய பேரறிவை என்னவென்று சொல்வது! பல காலம். இசையைப் பயின்று அறிய வேண்டிய நுட்பங்களை எளிதில் உணர்ந்து பாராட்டுகின்றாரே!” என்று ஆச்சரியப் பட்டார்கள். அவர்கள் பேசிய பேச்சுக் குறுங் கோழியூர் கிழார் காதில் விழுந்தது. தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இவர் தேர்ந்த அறிவுடையவர் என்று அறிந்தோம். இசை-

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/76&oldid=1267445" இலிருந்து மீள்விக்கப்பட்டது