பக்கம்:அறப்போர்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


மழை வரும் என்ற நம்பிக்கையை ஊட்டி, அழகு காட்டி இலகும் அந்த வானவில் அவர் களுக்கு மகிழ்ச்சியைத் தருவது அல்லவா? அந்தத் திருவில்லேயன்றிக் கொலை வில்லைச் சேரமான் நாட்டுக் குடிமக்கள் அறியமாட்டார்கள்.

வில் கிடக்கட்டும்; வாள், கேடயம் முதலிய வேறு படைகள் பல உண்டே அவற்றில் ஏதேனும் அவர்களுக்குத் தெரியுமா? அவற்றையும் அவர்கள் அறியமாட்டார்கள். பிறரைத் துன்புறுத்தவோ கொலைபுரியவோ முயல்பவர் களுக்கல்லவா அவை வேண்டும்? இங்கே யாவரும் அன்பிலே இணைந்து வாழும்போது படைக்கலத்துக்கு வேலை ஏது? படையை நினைப்பதற்கே வாய்ப்பு இல்லை.

ஆனாலும் ஒரு படை அவர்களுக்குத் தெரியும். அதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் வாழ்கிறார்கள். அதுதான் உழுபடையாகிய கலப்பை, அந்த உழுபடைதான். அவர்களுக்கு உணவைத் தருவது. நாஞ்சிலாகிய கலப்பைதான் அவர்கள் அறியும் படை கைக்கொண்ட படை போற்றிப் பாதுகாக்கும் படை நாஞ்சில் அல்லது வேறு படையை அவர்கள் அறியார்.

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/86&oldid=1267454" இலிருந்து மீள்விக்கப்பட்டது