பக்கம்:அறப்போர்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


வற்றையும் பிணைத்துக் கவிதையாக்க விழைந்தார். அவனையே முன்னிலைப்படுத்திச் சொல்லும் முறையில் பாவைத் தொடுத்தார். கடலின் ஆழத்தையும், ஞாலத்தின் அகலத்தையும், திசையின் நீளத்தையும், ஆகாயத்தின் பரப்பையும் அளந்தறிந்தாலும் அளந்தறிய முடியாத அவனுடைய அறிவையும் ஈரத்தையும் கண்ணோட்டத்தையும் பாராட்டினார். அவன் நாட்டில் வாழ்வோர் தீயின் தெறலையும் செஞ்ஞாயிற்றின் தெறலையும் அன்றிப் பிறிது தெறலையறியாத நிலையையும், திருவில் அல்லது கொலை வில்லையும் நாஞ்சில் அல்லது பிற படையையும் அறியாத தன்மையையும் சிறப்பித்தார். பகைவர் மண்ணை அவன் உண்டாலும் மயற்கையுற்ற மகளிர் உண்பதை யன்றிப் பகைவர் உண்ணாத மண்ணைப் புகழ்ந்தார். அம்பு துஞ்சும் கடியரணையும், அறம் துஞ்சும் செங்கோலையும், குடிமக்கள் தீய நிமித்தம் கண்டாலும் நடுங்காமல் உள்ள பாதுகாப்பையும் எடுத்துரைத்தார். ‘நீ இப்படி இருத்தலினால் தான் மன்னுயிரெல்லாம் நினக்கு எந்தச் சமயத்தில் என்ன நேருமோ என்று அஞ்சுகின்றன’ என்று பாடலை நிறைவேற்றினார்.

கவிதை முழு உருவம் பெற்றது. அவருக்கே அதைப் பாடியமையால் பெருமிதம்

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/92&oldid=1267462" இலிருந்து மீள்விக்கப்பட்டது