பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

________________

9 ஜன் கல்லறைகளைக் காட்டியிருக்கிறது என எண்ணி னோம். அன்று அணிவகுத்த ஆயிரமாயிரம் வீரர்களின் படைவரிசையை வர்ணித்திருக்கிறது என மகிழ்ந்தோம். திடீரென இந்துவும் மித்திரனும் உருவிய பூணுலைக்கண்டு வெலவெலத்து விடுவார் அவிநாசி என நாம் எதிர்பார்க்கத் தானில்லை. அந்த வஞ்சகப் பஞ்சணையிலே - வரதாச்சாரி வர்க்கம் விரித்தவலையிலே தலைகுப்புற வீழ்ந்தார். தமிழ் அழிக்கத்துணிந்தார். தமிழ் அழிக்கத்துணிந்தார். தகாத செயல் இதுவென நாம் எடுத்துரைத்தும், எச்சரித்தும் ஆச்சாரியாரின் செவியையே அமைச்சர் பெற்றிருந்தார். கட்டாயமாக இந்தியைத் திணித்திருப்பவர் நாம் களம்புகுகாதை நடத்தியதும் இந்தி கட்டாயமல்ல; இஷ்டபாடந்தான் என சுற்றிசுற்றி சூறாவளிப்பிரச்சாரம் செய்கிறார். பதவி நிலைக்கப் பணிபுரியும் சர்தார் வேதரத்னமும் அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். இந்தி இஷ்டபாடந்தானாம் அவர்கள் கிளப்பும் புதுரக விஷப்புகை. கட்டாயபாடம் என்று முழக்கியவாயால் இந்தியைக் கட்டாயமாகத் திணித்து விட்டு - இது இஷ்ட பாடந்தான் என்று விளக்கம் கூறும் நிலை ஏற்பட்டிருக் கிறது. இதுவே நமக்கு போரில் முதல் வெற்றி. 1 ஆங்கிலத்தை மூன்றாவது மொழியாக்கிவிட்டோம் தமிழை முதல் மோழியாக்கிவிட்டோம் இந்தி கட்டாயமல்ல, இரண்டாம் மொழிக்குழுதான் கட்டாயம். இரண்டாம் மொழிக்குழுவில் கன்னட முண்டு, களிதெலுங்குண்டு, கவின்மலையாளமுண்டு. பார்சியுண்டு, சமஸ்கிரதமுண்டு, இந்தியுமுண்டு. இதில் ஏதாவதொன்றைத்தான் கட்டாயமாகப் படிக்கவேண்டும். ஆகவே இந்தி கட்டாயமல்ல" இது அந்த விஷமிகளின் விபரீத வாதம். நாங்கள் சொல்லுகி றோம். சட்டப்படி இந்தி இஷ்டபாடந்தான். ஆனால் நடை முறைப்படி இந்தி கட்டாயபாடமாக்கப் பட்டிருக் கிறது. அழகான ஒரு வாலிபன். அரும்புமீசையுடையோன். அவனுக்கு மணந்துகொள்ள ஒரு பெண் தேவை. அதற்