பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

10 காக ஒரு தரகனை அழைக்கிறான்.ஆவலை வெளியிடுகிறான். தரகன் பெண் தேடிப்புறப்படுகிறான். நாலைந்து பெண்கள் கொண்டுவரப்படுகிறார்கள். வாலிபன் அவர்களில் ஒருத் தியைப் பொறுக்கவேண்டும். வரிசையாக அந்த வனிதை யர் நிறுத்தப்படுகின்றனர். அதில் நாலு பேர் நல்ல அழகி கள். "நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்" என்ற பாரதி தாசனின் பாட்டுக்கு ஏற்ப குடும்பம் நடத்தும் குணத் தினர். விவரிப்பானேன், அவர்கள் குளிர்தென் றல்கள். ஆனால், அந்த அழகிகள் அலங்கோலப்படுத்தப்பட் டுள்ளனர். நீண்டுவளர்ந்த அவர்கள் கூந்தல் குறுக்கும் நெடுக்கு மாய் வெட்டப்பட்டு கோரமாக்கப்பட்டுள்ளது. தங்க ரோஜா நிறமேனியிலே தார் பூசப்பட்டிருக்கிறது, கன்னங்களில் கருங்கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. கந்தலாடைக்காரிகளாய் நிற்கின்றனர், அந்தக் கன்னிகள். ஐந்தாவதாய் ஒருத்தி. அவள் விபசாரி. தன்னை அந்த வாலிபனுக்கு கட்டிவைத்தால் தரகனுக்கு நிறைய பணம் தருவதாக வாக்களித்திருக்கிறவள். விபசாரத் தால் ஏற்பட்ட முக விகாரத்தை மறைக்க அவளுக்கு குட்டிகூரா பவுடர். தொழிவின் காரணமாய் குழி விழுந்த அவள் கண்களை மறைக்க "கூலிங் கிளாஸ்' கண்ணாடி. சொறிபிடித்த மேனியை மறைக்க சொக்குப் பச்சை சில்க் புடவை. முடைநாற்ற மெடுக்கும் அவள் கூந்தலில் முல்லைமலர்கொத்து ஆடம்பரத்தால் வரை வசீகரிக்க அவள் கையிலே சுழன்று கொண்டிருக் கும் கைக்குட்டை. ஆட் இந்த நிலையில் கல்யாணத்திற்கு தவிக்கும் அந்தக் காளை யாரைத்தேர்ந்தெடுப்பான்? விபசாரியைத்தானே- அவன் விவாகத்திற்கு ஏற் பாடுசெய்வான். ஏன் நீங்களும் நானும்கூட ஏமாந்து போய்விடமாட்டோம்!? இதே முறையில்தான் இந்தி விபசாரி இத் தமிழகத்தில் கோண்டுவந்து நிறுத்தப் பட்டிருக்கிறாள்.