பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

________________

11 இந்தி படிக்க வசதியுண்டு - விபசாரிக்கு விதவித அலங்காரம் இருப்பதுபோல! இந்திக்கு பள்ளியில் ஆசிரியர் பலர் உண்டு - விபசாரிக்கு சில்க் சேலை கட்டியிருப்பது போல! இந்திக்கு பண உதவி தாராளமாய் உண்டு- விப சாரிக்கு முல்லைமலர் சூட்டியிருப்பதுபோல! கன்னட, - மலையாள அதாவது ஆனால் தெலுங்கு, .........@ 5, மொழிகளுக்கு ஆசிரியர்கள் கிடையாது அழகான பெண்களுக்கு அலங்காரங்கள் இல்லாததுபோல! மற்ற மொழிகளுக்கு பண வசதி கிடையாது- மலர்முக வதிகளுக்கு நல்ல சேலையில்லாததுபோல விபசாரி ஸ்தானத்தில் இந்தியும், அழகிகள் ஸ்தானத்தில் தெலுங்கு மலையாள, கன்னட மொழிகளும், வாலிபன் ஸ்தானத்தில் மாணவர்களும், நிற்கும்போது தரகன் ஸ்தானத்தில் நம் அன்புக்குரிய அவிநாசியர் அறிந்தோ- அறியாமலோ நின்றுகொண்டிருக்கிறார் என்பதை அ அவரே ஆட்சேபிக்கமுடியாது. இஷ்டமா? கட்டாயமா? என்று இப்போது புரிகிறதா இந்தி இஷ்டமாகத்தானிருக்கட்டுமே இந்தி இந்த நாட் டுக்கு ஏற்றதுதானா? இந்தியிலே இலக்கியவளமுண்டா? மணி மேகலையுண்டா? குண்டலகேசியுண்டா? சிலப் பதிகாரமுண்டா? சீவகசிந்தாமணியைக் காட்டமுடியுமா? சிங்கத் தமிழரின் திறன் விளக்கும் புறநானூறைப் பார்க்க முடியுமா? காதல் கீதம் பாடும் 'அக'த்தை இந்தி அறி யுமா? கண்ணகி இல்லையே அங்கு! கனகவிசயன் தலை நெறித்த சேரன் செங்குட்டுவனில்லையே! நட்புக்கு இலக் கணம் சேர்த்த பிசிராந்தையும் -நாட்டுக்கு இலக்கியம் தந்த இளங்கோவும் இல்லையே! ஓடி வந்த இந்திப் பெண் ணே! உன்னிடத்தில் கடையேழு வள்ளல்கள் இல்லையேடி சகள்ளி! குறள் இல்லையடி குடிகேடி! அதோபாரடி கயல், வில் புலிகொடி மூன்றினால் கடல் கடந்தவளடி எங்கள் தாய்! என நாம் பெருமிதங்கொள்கிறோம். பீடு நடை போட்டு பேசுகிறோம். போர் நடுவே அதை நினைத்து மகிழ் கிறோம். சிறப்பெலாம் பெற்ற செந்தமிழ்த் தாயைக்காக்க போர் முனையில் நிற்கிறோம் எனப் பெருமையடைகிறோம். வள்ளுவனிடத்தில் விளையாடிய தமிழ் - ஔவையீடத்தில்