பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

________________

12 ஆத்திசூடியாய் சிரித்த தமிழ் - பாரதி நெஞ்சில் நர்த்தனமாடி -பாரதிதாசனின் இதயக்குமுறலாய் கிளம் பிய தமிழ் - ஒரு தமிழ் அமைச்சரால் அதுவும் தமிழர்கள் சாகாமல் இருக்கும்போது சீர்குலைக்கப்படுவதென்றால் அதைப்பார்த்துக்கொண்டிருக்க நாம் என்ன சோதாக் களா? அல்லது சோற்றாலடித்த பிண்டங்களா? இந்திய உபகண்டத்தை ஒரு தெசமென ஒப்புக் கொண்டு, இதற்கு ஒரு பொது மொழி தேவையென்றால் அந்த மொழி இந்தியாக இருக்கவும் அதற்கு அருகதை யில்லை. மதவாடை வீசாத மலராம் திருக்குரளைத் தன் னகத்தே கொண்ட தமிழ்மொழிதான் பொது மொழியாக இருக்க தகுதியுடையது. ஆரியக்கலாச்சாரப் படையெடுப் புக்கு அணிபோட அதுதான்வழி. ஆளவந்தார்க்கு அதைச் செய்யும் துணிவு இல்லையே ! ஏன்? அமுதமிருக்க நஞ்சு தேடுகிறார்களே ஏன்? இந்தி ஆதரிப்புக்கூட்டம் நடத்தும் தேசீயத்திரா விடரே ! வந்தேமாதர கோஷத்தால் உங்கள் காதுகள் செவிடுபடாமலிருந்தால் ஜெய்ஹிந்த் கூச்சலால் உங்கள் கர்ணபேரிகை கிழிபடாமலிருந்தால். நான் சொல்வதைக் கேட்காவிட்டாலும்... உங்கள் தலைவர்கள் கூறியதைக்கேளுங்கள். மகாத்மாகாந்தி இ தியப் பொது மொழியாக இந்துஸ்தானிதான் வேண்டு மென்றார். இந்தியல்ல! ஒரு பாஷையை வலியுறுத்தி புகுத்தக்கூடாது என்றார் பண்டித ஜவகர் மத்திய சர்க்காரிலேயே இத்தேசத்துப் பொதுமொழி இந்துஸ்தானியா? இந்தியா? படவில்லை. தமிழ் வாழ்க என்று தீர்மானிக்கப் என்று வாயளவில் முழக்கி...... அழுத்தந்திருத்தமாக ஜெய்ஹிந்தை" உச்சரிக்கும் போலித் தமிழ் பக்தர்களே ! இப்போது சொல்லுங் கள்