15
________________
15 படகு கவிழ்ந்த கதைபோல நமது கல்வி மந்திரி அவிநாசி யார் - அதிகாரம் என்ற குச்சியால் இந்திக் குரங்கில் - குத்தி, அது தான் பிழைக்க அடக்குமுறையென்னும் பாம்புப்பெட்டியில் தாவி, அடக்குமுறை அரவங்கண்ட தமிழர் அச்சங்கொண்டு ஓடி... ஆட்சிப் படகு நட்டாற் றில் அமிழ்ந்துவிடும் நிலையை சிருஷ்டித்துவிட்டார். கதையில் வருபவனும் பிரமச்சாரி. கல்விமந்திரியும் பிரமச் சாரி. கேட்கவேண்டுமா விளைவை ? எங்களை ஏளனம் புரிபவர் எங்கள் கொள்கைகளின் அங்கங்களை ஒத்திட்டுப்பாராதவர் - விளக்கம் தெரிந்து கொள்ள விரும்பாதவர் - வேதரத்தினமே இந்த தேசம் என எண்ணுபவர், போராட்டத்தில் பெருக்கெடுக்கும் எங்கள் ரத்த ஓடைகளைக் கண்டபிறகாவது அவர்கள் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கட்டும். ஆகஸ்ட் பத்துக்குப் பிறகு நாங்கள் பட்ட அல்லல்களை எண்ணிப்பார்த்து எங்கள்மேல் இரக்கப்படட்டும். தமிழ்காக்கவந்த தோழியர் தனலட்சுமியை முப்பது மைலுக்கப்பால் தன்னந்தனியாய்க் கொண்டுபோய் விட்டார்கள்; வெள்ளையனின் கொடுங்கோலை வெறுத்த வர்கள் இந்த வேதனையை விளையாட்டாகக் கருதினார்கள். 66 எட்டுமாத கர்ப்பவதி, வயிற்றிலே சிசு துடிக்கத் துடிக்க, தள்ளாடி நடக்கும் தன் நாலுவயதுக் குழந்தை "அய்யோ அம்மா பசி" என அலற, மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தாள் கருகிய மொட்டென ஒரு மழலை சூரியனின் கனல் தாங்காத அதன் தாய்- இந்தப் பரிதாபப்படலத்தை அங்குள்ள மரங்கள் கண்டிருந்தால்- அந்த மரங்க ளுக்கு பேச வாயிருந்தால் - சீ ! இதுதானா சுயராஜ் யம் !” எனக் கூறி சிரித்திருக்கும். அந்தச் சிரிப்பின் ஒலியிலேயே அக்கிரமங்களின் அஸ்திவாரம் அசைக்கப்பட்டிருக்கும். அகிம்சா வீரர்களின் ஆட்சியிலே இந்த அக்கிரமம் நடை பெறலாமா என நாடு கேட்கிறது. நாட்டுமக்கள் கேட்கிறார்கள். கேட்பது மட்டுமல்ல சிறிக் கிறார்கள். இப்படி சிரிப்பாய் சிரிக்கத்தானா காந்தி யார் கஷ்டப்பட்டார் என்று திரு.வி. க. அழுவதும், அதைக்காதில் போட்டுக்கொள்ளாமல் காமராஜர் சுப்பரா