16
________________
16 யன் கோஷ்டி 'காரைக்கால்- -மாகிகளை நம் ஆதிக்கத்தில் கொண்டுவர வேண்டு' மென கர்ச்சிப்பதும் நம் காதில் ஒலிக்கிறது. இரும்பு நெஞ்சன் இட்லரும் - மூர்க்கன் முசோலினிவும் பாசீசத்தை இந்த பாரதபுத்திரர்களிடம் தான் கற்றுக்கொண்டார்களோ என்று சந்தேகிக்கிற அளவுக்கு சங்கடங்கள். நாங்கள் கஷ்ட நஷ்டங்களை கருதிப்பார்த்துத்தான் போரில் இறங்கினோம் எங்கள் ஈட்டிகளின் கூர்மையிலே - கேடயத்தின் வலுவிலே நெஞ்சு உறுதியிலே சந்தேகமில்லையென்று தளிந்த பிறகே தலைவர் ஆணை கிடைத்தது எங்களுக்கு. போரை விரும்பமாட்டோம்: போர் முனையில் வந்துவிட்டால் புறமுதுகிடும் வழக்கம் தமிழ்உணர்ச்சிபெற்ற எங்களுக்கு கிடையாது. இதைவிடக் கடுமையான கொடுமைகள் எங்களை அணுக இருக்கின்றன. அடக்குமுறையின் அகோர வாய் எங்களைப்பார்த்து பிளந்தபடியிருக்கிறது. அதிகாரம் தன் இரத்தநாக்குகளை நீட்டியபடி எங்களை மோப்பம் பிடிக்கிறது. சட்டத்தின் விஷப்பற்களுக் கிடையே நாங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறோம். இன்று உங்களிடையே உலவுகிறநாங்கள் நாளை தூக்குமேடையில் ஊசலாடலாம். பலிபீடத்தில் தலையிழந்த முண்ட மாகக்கிடக்கலாம். சமாதிகளாய் அமைந்துவிடலாம். சிறைச்சாலையில் சித்ரவதைக்கு ஆளாகலாம். ஏன்... எங்கள் தலைவர் பெரியார் ராமசாமி நாளை சென்னை கடற்கரையிலே பேருரையாற்ற வரலாம் பெரி யார் பேச்சுக்கு 144 தடைபோடப்படலாம். பெரியார் தடையை மீறி பேசுவதற்காக மேடையில் ஏறும் சமயம் போலீசாரால் கைது செய்யப்படலாம். தமிழகத்தின் தலைவன் தன்மானக்காவலன்--தள்ளாத வயதிலே தமிழ் காக்கும் பெரியோன் - பொன்னிற மேனியும் வெண்ணிற தாடியுங்கொண்ட புரட்சிச் சிம்மம் -- திராவிடத்தின் தந்தை - ஆ! எங்கள் முடிசூடா மன்னனுக்கா சிறைச் எனச் சீறியெழலாம் சென்னைப் பொதுமக்கள். பொது மக்கள் பொங்குங் கடலானது கண்டு, போலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகித்தும் பயன் காணாமல் கடை சாலை