பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

18 தூக்கி வைத்திருப்பதை நாங்கள் எதிர்ப்பது தவறா? திரா விடத்தை வியாபார மார்க்கெட் ஆக்கிக்கொண்ட மார்வாடி பனியாக்கொள்கையை நாங்கள் மறுப்பது தவறா? சமுதாயத்தை சருக்கு நிலமாக்கிய ஜாதி வெறி யரை நாங்கள் சாய்க்க நினைப்பது தவறா? கட்டாய இந்தியை நுழைத்து மாணவரைக் கெடுக்காதீர் எனக் கூறுவது தவறா? இதற்காக நடைபெறும் எங்கள் பிரச்சாரங்களை சர்க்கார் தடுத்தால் அந்த சர்க்காரை எதிர்ப்பதுதான் தவறா? பிரஜா உரிமைக்காக போராடி யவரே! எழுத்துரிமை கேட்ட எனதன்பரே! இதிலே எது தவறு? இந்தப்போர் மொழிப்போர் மட்டுமல்ல. இது இன உரிமைப்போர். ஏகாதிபத்திய எதிர்ப்புப்போர். பார்ப்ப னீய பனியா ஒழிப்புப்போர். இதில் வெற்றி தோல்வி எந்தப்பக்கம் தாவினாலும் கவலையில்லை. மானத்தை காப்பாற்ற ஒரு போர் நடந்தது என்பது மட்டும் சரித்திரத்தில் இடம் பெற்றால் போதும். வருங் சந்ததிக்கு அந்த வரிகள் வேல்களாகும். படை கால முழக்கமாகும். ....... திராவிடப் பெருங்குடி மக்களே! நடராசன் தால முத்து கல்லறைகளைக் காட்டி-நாயர், தியாகர் பணிகளை நினைவுபடுத்தி-வேலாயுதத்தின் பிணத்தை எதிர் நிறுத்தி உங்களை வேண்டுகிறோம் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்' ஆதரவு தர முடியாவிட்டாலும் ஆசி கூறி அனுப்புங்கள் அறப்போருக்கு! உங்களிடம் நாங்கள் கோருவதெல்லாம் நாங்கள் அத்தனைபேரும் செத்து மடிந்துவிட்டால் தயவு செய்து எங்கள் எல்லோருக்குமாக சேர்த்து ஒரு சமாதி கட்டி வையுங்கள். அந்தச் சமாதி, எதிர்காலத் திலே ஓமந்தூரார் பேரனின் கண்ணீரால் நனையட்டும் என்பதற்காக! வேதரத்தினத்தின் வம்சம் அங்கு நின்று விழிகளில் நீர் பெருக்கும் என்பதற்காக அந்தக் கண்ணீர் எங்களையும் -நாங்கள் எதற்காக செத்துப்போனோமோ அத்த குறிக்கோளையும் நினைவுபடுத்தும் என்பதற்காக இந்தக்கடைசி கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம் நாங்கள் மாளுவதற்குத் தீர்மானித்து களம்புகு நேரத்தில்