பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

________________

19 திராவிட மழலைகட்கு எழுதிவைக்கும் உயில்; சுயமரியாதை சொத்தைக் காப்பதும் திராவிட நாட்டாட்சியை வசப் படுத்துவது என்பதும்தான். திராவிட வாலிபரே ! வனிதையரே ! மானம் காக்கும் எண் ணம், மரக்குடியில் பிறந்த பண்பு, இவைகள் நம்மிடை இருப்பது உண்மையானால் வீட்டுக் கொருவர் கிளம்புங்கள். ஓராயிரம் ஈராயிரம் ஆண்டுகளாய் வளர்ந்துவரும் அநீதியை ஒரு பார்த்து விடுவோம். கை யிருக் ஆட்சியாளரே! நீங்கள் அடக்குமுறையை அள்ளி எறியுங் கள் எம்மேல்! ஆனால், அடக்குமுறை வெற்றியைத் தருமா என் பதை இரத்தம் சிந்திய திருப்பூர் குமரனைக் கேளுங்கள். சிறையில் வாடிய வ.உ.சிதம்பரத்தைக் கேளுங்கள். தூக்கில் தொங்கிய பகவத்சிங்கைக் கேளுங்கள். அவர்களுடைய பதிலைக் கண்ட பிறகும் அடக்குமுறையில் நம்பிக்கை உங்கட்கு குமானால் அந்த ஆயுதத்தைச் சுழற்றுங்கள். போலீசார் போத வில்லை என்றால். திராவிட இனத்து விபீஷணர் குண்டர்களை ஏவுங்கள்; அதிலும் முடியாவிட்டால் பண்ணைக்காரரின் ஆட்கள் நிறையக் கிடைப்பார்கள்; எம்மீது பாயவிடுங்கள். பட்டாளத் தையே வரவழையுங்கள். எதற்கும் பின்னடைய டைபவர்களல்ல நாங் கள். இயேசுக்கு சிலுவையும், முகம்மது நபிக்கு கல்லடியும், சாக்ரடீசுக்கு நஞ்சும், காந்தியாருக்கு துப்பாக்கி குண்டுகளும் பரிசாகத் தரப்பட்ட பயங்கர வரலாறுகளைப் படித்துப் பார்த்துத் தான் நாங்கள் அறப்போர் தொடுத்திருக்கிறோம். வீசுங் உம் நடக்கட்டும் உங்கள் அடக்குமுறை. எங்கே உங்கள் அதிகார அஸ்திரங்கள் ? இதோ எங்கள் நிமிர்ந்த நெஞ்சு. கள். கண்டபடி வீசுங்கள், கை, கால், கண், காது, மூக்கு, முகம் எல்லாம் மூளியாகட்டும். மூளையே சிதறித் தெரித்தாலும் முதுகைக் காட்டிவிடும் சோதாக்களாகி விடமாட்டோம். இதை மறந்துவிடாதீர்கள். இது 'தேவாசுர' யுத்தம். ஆம்...... இராமாயணப் போர். இந்தப் போரில் நிச்சயமாக வெற்றி இராவணனுக்குத்தான்! இராமனுக்கு அல்ல! ராஜ்யம் விபீஷணனுக்குமல்ல! இதுவே எமது அறப்போரின் இறுதிப் பிரகடனம்.