________________
அறப்போர் போராட்டம் தொடங்கிவிட்டோம், தோழர்களே போராட்டம் தொடங்கிவிட்டோம். புரட்சியின்வேகம் உணராது - புகையும் எரிமலையை புன்னகை அருவியென எண்ணிடும் பொட்டைக் கருத்தினரை எதிர்த்து-போடுங் கள் மஞ்சள்பெட்டியில் வோட்டுகளை, பூரிப்பு பொங்கிடும் உங்கள் வாழ்வினிலே என்று பேசி இன்று பொத்தல் ஆட்சி நடத்தும் அன்பர்களை எதிர்த்து - மொழியும் கலையும் வாழும் முழு சுதந்திரம் தவழும் என்று வாய்ப் பறைசாற்றி தமிழையே தரைமட்டமாக்கப் புறப்பட்ட வந்தேமாதர வீரர்களை எதிர்த்து - ஆட்சிபீடத்தில் ஏறி யதும் அதிகார போதையில் அடக்குமுறைகளை அள்ளி அள்ளி வீசிடும் ஆணவ ஆட்சியாளரை எதிர்த்து போராட்டம் தாடங்கிவிட்டோம் தாழர்க போராட்டம் தொடங்கிவிட்டோம். களே ! வரவேற்பது வாழ்வு சாவு" இரண்டிலொன்றை என்ற வைர நெஞ்சத்துடன் களத்தில் குதித்திருக்கிற நாம் அவசரப்பட்டோ, ஆத்திர உணர்ச்சிக்கு அடிமைப் பட்டோ, அவசியமில்லாமலோ போர்ப்பரணிபாடவில்லை. மாநாடுகூட்டி, மன்றாடிக்கேட்டு, மறைமலையடிகளாரை. மாத் தமிழர் திரு. வி. கவை, மறத் தமிழர் சிவ ஞானத்தை மாற்றுக் கட்சியினர் தமிழறிவை - மநதிரி களுக்குக்காட்டி எதற்கும் இணங்காத இறுமாப்பான நிலை ஆளவந்தார்க்கு என்று அறிந்த பின்னரே போர்! போர் !! போர் !!! எ ன்றோம்; போர் மூண்டேவிட்டது. சமருக்குமுன் சந்திப்பு நடத்தினோம். பெரியார் - பிர தமர் பேட்டி நடந்தது. யுத்த தர்மத்தில் ஒரு சிறிதும் நழுவவிடவில்லை. களத்திலே காளையரை-கன்னியரை கல்லரையாகவுந் துணிந்த வீரர்களை - களப்பலியாக எங் கள் அருமை அண்ணாவை நிறுத்தியிருக்கிற நாங்கள்-