5
________________
20 5 னம் சாதித்தனர். போர்வாளுக்குத்தடை, அறிவுக்குத் தடை பெரியாரே என்ன சொல்கிறீர்கள் ? என்று கேட் டோம். பொறுமனமே பொறு என்றார் பெரியார்; பொறுத்தோம். க அடுத்து -- இல்லாத கறுப்புச் சட்டைப்படையை இருப்பதாக நினைத்து கறுப்பு சட்டைப்படை தடை யுத்த ரவு தாண்டவமாடிற்று. அமைச்சர் ஓமந்தூரார். ஆற் காடு ராமசாமி, அறிஞர் சண்முகம் அன்பர் காமராஜ், அடிக்கடி கட்சி மாறும் சுப்பராயன் அத்தனைபேரும் ஆரிய அகராதியில் சூத்திரர்கள். இந்த அவல் அழிக்கத்தானே நாங்கள் கறுப்புடை அணிந்தோம். அதற்குமா மறுப்பு மந்திரியாரே? கேட்டோம். என நிலையை மனமுருகிக் கறுப்புச்சட்டைப்படையென ஒரு ராணுவ அமைப்பு இல்லையாமே - அது எந்த பலாத்கார நடவடிக்கை களிலும் ஈடுபடுவதில்லையாமே - இப்படியெல்லாம் திரா விடகழகத் தலைவர் ஈ.வே. ராமசாமி அவர்கள் அறிக்கை விடுத்திருக்கிறாரே-பிறகு ஏன் தடை விதித்தீர்? இம்மாதிரி சரமாரியான கேள்விகள் சட்ட சபை யில் கேட்கப்பட்டன. மந்திரிமாரில் ஒருவர் முத்தான வாய்திறந்தார். பதில் சொல்வார் என எதிர்பார்த் தோம். .. என தடை யுத்தரவுக்குக் காரணம் "தெரியாது திருவாய்மலர்ந்தருளினார். அவர் இப்போது மாஜி மந் திரி. அந்த கேலிச் சித்திரத்தைக்கண்டு மகிழவா எமக்கு நேரம்? மனம் புண்ணாயிற்று. பெரியாரே! இதற்கு வழி என்ன என்று ஈரோடு நோக்கி உரத்த குரல் எழுப் பினோம். பொறுமனமே பொறு என்றார். அப்போதும் பொறுத்தோம். போர் துவங்கவில்லை. பின்னர், 'விடுதலை'க்கு 2000-ரூபாய் ஜாமீன் கோரியது ஆட்சி பீடம். காரணம் கேட்டோம் கனல்கக்கும் கண்களுடன். காரணமா கிடைக்கும் இந்த கேட்பாராற்ற ராஜ்யத்தில்! 'விடுதலை' செய்த தவரென்ன? உலக உத்தமர் காந்தியைக் கொன் றது ஒரு பார்ப்பான் என்ற உண்மையை உரைத்தது