6
________________
குற்றமா? பெரியார் ராமசாமியின் பொன் மொழிகளை திராவிடத்திற்குத் தந்தது குற்றமா? அரசியலில் குட்டை குழப்புவோரை சமுதாயத்தில் குறும்புத்தனம் செய்வோ ரைத் தன் குத்தூசியால் குத்தித் திருத்தியது குற்றமா? காமத்தை வாரியிறைக்கும் ஏடுகள். வாலிபரை வசீகரித்து வாழ்வை விழலாக்கும் இதழ்கள், இவைகளெல்லாம் அமைச்சரின் கண்களில் படாததேனோ? இந்தக் கேள் வியை கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக- ஆவேசமாகக் கேட்டுவிட்டு பெரியார்பக்கம் திரும்பினோம். அவர் என்ன சொல்கிறார் எனக்கேட்க. பொறுமனமே பொறு என்ற அமைதி ஒலியே அங்கும் எழுந்தது.அடங்கினோம், அமைதி பெற்றோம், அப்போதும் போர்நாள் குறிக்கவில்லை. பிறகு, . குன்றெடுக்கும் பெருந்தோளான் - கொடை கொடுக்கும் கையான் குள்ள நரிச்செயல் செய்யும் கூட்டத் தின் கூற்றம் - என் தமிழர் மூதாதை ! என் தமிழர் பெரு மான்! வஞ்சக விபீஷணனின் அண்ணனென்று தன்னை வையத்தார் சொல்லுமொருமா பழிக்கே அஞ்சும் நெஞ்ச கன், நல்யாழின் நரம்புதனைத் தடவி நிறைய இசைச்செவி யமுது தரும் புலவன், வெஞ்சமரில் சாதல்வர நேரிடினும் சூழ்ச்சி விரும்பாத பெருந்தகை, தென்னிலங்கை வேந்தன் இராவணன். அவன் சிறப்பைப்பற்றி திரு புலவர். V. S. குழந்தை ஒருகாவியம் னைந்தார். இராவண காவியம். ஆம் புதுமைச்சோலை. அந்தச் சோலைக்குத் தீயிட்டனர் செங்கோலேந்திகள். இராவண காவியத்திற்குத் தடைபோட்டது. விற்காதே- வாங்காதே என சத்தமிட்டது சர்க்காரின் சட்டம். இராவணகாவியம் பறிமுதலாக வேண்டும் என்று நாங்கள் நினைக்காமலிருக்க முடியுமா? நினைக்கிற நேரத்தில் எங்கள் நெஞ்சு நெருப்பாக மாறாமல்தானிருக்க முடியுமா? ஓமந்தூராரை அழைத்துக்கொண்டு கம்பராமாயணச் சோலையிலே வந் தோம், அங்கே பூத்துக்குலுங்கியிருந்த மலர்களில் பூநாகங் கள் நெளிவதை அவருக்குக் காட்டினோம். நாமம் போட்டி ருப்பது ராமனல்ல..... நம்மினத்தைக் கடிக்கவந்த நல்ல பாம்பு என எச்சரித்தோம். அதோ சலசலென ஒடுவது ஏன்