7
________________
17 நீரோடையல்ல. நம் கலைவளத்தை நாசமாக்கும் விஷ வாய்க்கால் என விளக்கினோம். அத்தோடுவிட்டோமா? மிதுலாபுரியை காட்டினோம். மிதுலையின் மாளிகையில் ஜன கன் மகள் ஜானகியைக் காட்டினோம். வில்லொடித்து சீதையை விவாகம் செய்ய விசுவாமித்திரனுடன் வரும் ஸ்ரீ ராமனைக் காட்டினோம். சீதையின் கண்களும், ராமன் கண்களும் பின்னிக்கொண்ட காட்சியை க காட்டி டினோம். ராமனின் தரிசனத்தால் புளகாங்கிதமுற்று - பூரிப்பு தாங்க முடியாமல் - பொங்கி நின்ற பூமாதா சீதாதேவி யைப்பற்றி கம்பர் பாடிய பாடலைக் காட்டினோம். அந்தப் பாடலிலே மகிழ்ச்சி தாங்கமுடியாமல் சீதையின் மறை விடம் திடீரென விம்மியதையும் - அதனால் மேகலாபரணம் அறுந்து விழுந்ததையும் கம்பர் வர்ணித்திருக்கிற பாங்கை படித்துக் காட்டினோம். மகாலட்சுமி அவதாரத்திற்கு 'வாமமேகலையிற் வளர்ந்தது அல்குலே" என்று மட்டரக வர்ணனை தந்த கம்பனின் கேவல புத்தியைக் காட்டினோம் இந்த ஆபாச ராமாயணத்துக்கு தடைபோட தைரியமற்ற சர்க்காரே! நீ எங்கள் ராவணகாவியத்துக்கு தடை போட்டது நியாயமா? நேர்மையா? நாணயமா? என்று கேட்டோம். கண்களிலே ரத்தம் தெரிக்க - அந்த ரத்தத்திலே ரோஷம் கொப்பளிக்க கர்ச்சனை புரிந்த நாங்கள் ஈரோடு நோக்கினோம். பொறுமனமே... பொறு என்றார் பெரியார் ராமசாமி. போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது. அதற்குப்பின் திராவிடர் நெஞ்சத்தைப் பிளக்கும் திடுக்கிடும் செய்தி கேட்டோம். எங்கள் தாயின் கழுத்தை நெறிக்கும் காட்சி கண்டோம். இந்தி நுழைந்தது இந்தி ! இதையும் பொறுக்கமுடியுமா? பெரியாரே இனிப் பொறுக்கமுடியாது. வீரர்கள் நாங்கள் வெகுளிகள் அல்ல. எங்கே போர்க்கட்டளை எனத் துணிச்சலாக கேள் விகிளப்பினோம், அப்போதும் பொறுமனமே பொறு என்றார் அந்தப் பொல்லாத கிழவர். எங்கள் துடிப்பு எங்களாலேயே அடக்கமுடியாத சக்தி பெற்றது, மாநாடு நடத்தினார். மாத்தமிழர் உள்ளத்தைப் படம்பிடித்து மதோன்மத்தருக்குத் தெரிவித்தார். மனம் இரங்கிற்றா