பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

________________

8 என மந்திரிகட்கு. எங்கே உத்திரவு இடுங்களய்யா அதட்டிப்பேசினோம். எம் தலைவரே ! பெரியாரே! எங் கள் அழுத்தமான எண்ணத்திலே - முறுக்கேறிய நரம்பு களிலே - சூடேறிச் சுழன்றோடும் ரத்தத்திலே - தின வெடுக்கும் தோள்களிலே - கனல்பொழியும் கண்களிலே தங்கட்கு நம்பிக்கையில்லையா? நாங்கள் சாவதற்கு அஞ் சும் சமூகத்தின னரா? சண்டைக்கு ஒளியும் மரபினரா? பாண்டியன் பரம்பரை ஆயிற்றே! சேரன் சந்ததியாயிற் றே! சோழனின் சொந்தக்காரராயிற்றே? சொல்லுங்கள் அய்யா சொல்லுங்கள் போர் என்று சொல்லுங்கள், பொக்கை வாயைத்திறந்து அந்தப் பொன்மொழியைச் சொல்லுங்கள். தித்திக்கும் அந்த தீரக்குரலை எம்மிடம் நீட்டுங்கள்... எங்கே? எங்கே?.. என, எரிமலைகளாய் நின்ற நாங்கள் கெஞ்சினோம். அய்யா வாயசைத்தார். அவர் வெண் தாடி அசைந்தால் போதுமே எங்களுக்கு. ஆகஸ்ட் பத்தில் போர் என்றார் அண்ணா சர்வாதிகாரி என்றார். போராட்டம் தொடங்கிவிட்டோம் தோழர் களே போராட்டம் தொடங்கிவிட்டோம். போரின் முதற்குறி - முதல் தாக்குதல் - இந்திக் கோட்டையைத் தவிடுபொடியாக்குவது பிறகு மார்வாடி கள் என்ற மாகினாட் அரண்களை மண்மேடாக்குவது. திராவிடத் தனியாட்சி மலரும்வரை நம் தோள்களுக்கு ஓய்வில்லை. அதுவரை போர்! போரேதான். அதற்காக... நாங்கள் வீட்டில் விடைபெற்று களத்தில் நிற்கும் வேளையில் விஷக்கோப்பைகளுடன் வேதரத்தினங்கள் உங்கள் முன் விஜயம் செய்கின்றனர். அவர்கள் நாக்கிலும் விஷம் கையிலும் விஷம்.. அது உங்கள் நரம்பில் ஏற்றப்படுவதற்காக! இந்த வேதனை தரும் நிலையைப் போக்க- விஷம், வேதரத்தினங்களின் ரூபமாக வருவதை எச்சரிக்க - நாங்கள் களத்திலிருந்தபடியே உங்களைக் காணவேண்டிருக்கிறது. இந்தி தென்னாட்டுக்கு இறக்கு மதியாகிறது என்றதும் கல்விமந்திரியார் கூறினார் கர்னாடகம் முதலிய பகுதிகளில் கட்டாயபாடம்; தமிழ் நாட்டில் இஷ்டபாடம் என்று! 1938, அவிநாசியாரோடு பேசியிருக்கிறது என நினைத்தோம். தாளமுத்து நடரா