பக்கம்:அறவோர் மு. வ.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

101

அக்கதைகளின் பெயர்களாகும். இத்தொகுதி 'Sound of Smore' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இவ்விரு தொகுதிகளிலும் உள்ள கதைகளுள் பல அவ்வப்போது எழுதப்பட்டவை; சில அவ்வப்போது இதழ்களிலும் மலர்களிலும் வெளியிடப்பட்டவை; சில புதியனவாகச் சேர்க்கப்பட்டவை என்பன நூல் முன்னுரைகளினால் தெரியவருகின்றன. ஆனால் எவை எவை எந்தெந்த இதழ்களிலும் மலர்களிலும் வெளியாயின? எவை புதியனவாகச் சேர்க்கப்பட்டன? என்பதை மு. வ. குறிப்பிடவில்லை. இவ்வாறு குறிக்கப்படாதமையால் வரலாற்றுணர்ச்சியோடு இவற்றை அணுக இயலவில்லை.

சிறுகதை குறித்த மு. வ. வின் சிந்தனை

சிறுகதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்கப்பட்ட இலக்கணச் சட்டகம் ஏதும் இல்லை. ஆயின் சிறுகதைகளில் அமைகின்ற சில கூறுகளின் அடிப்படையில் அவற்றின் தரமும் சிறப்பும் அளந்து மதிப்பிடப்படுகின்றன. உருவம், உள்ளடக்கம், உத்தி என்ற மூன்று முதன்மைக்கூறுகளின் ஒருங்கிணைவாலும், இழைவாலும் சிறுகதை சிறக்கின்றது என அறிஞர்கள் உரைப்பர். மு.வ. வின் பார்வையில் சிறுகதை என்பது படிப்போர்க்கு இன்பமளிப்பதாகவும், வாழ்க்கையை நன்னறியில் செலுத்துவதாகும் தோன்றுகின்றது. இதனை,

கலையின் பயன் இரண்டு. ஒன்று, கிடைக்கும் சிறுசிறு ::ஒய்வுக்காலத்தை இன்பமாகக் கழிக்கச் செய்வது.
மற்றொன்று நம்மை அறியாமல் வாழ்க்கையைத்
திருத்தி உயர்த்துவது. இந்த இரண்டும் ஒருசேர
அமையும் சிறப்பு சிறுகதைகளில் மிகுதியாகக் காணலாம். ::அதனால்தான் சிறுகதை இலக்கியம் உலகமெல்லாம்
செழித்து வளர்ந்து வருகின்றது.

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/104&oldid=1224118" இலிருந்து மீள்விக்கப்பட்டது