பக்கம்:அறவோர் மு. வ.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அறவோர் மு. வ.

கெனத் தனியிடம் பிடித்துக் கொள்வதை விரும்பாத அறவோர். இதனை அவர்தம் தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் பல இடங்களில் காணலாம்.

மு. வரதராசன், கு. ராஜவேலு ஆகியோர் எழுதும் நாவல்களின் நடை பலருடைய உள்ளங்களைக் கவர்ந்தது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் வைத்துக் கொண்டே கதை பின்னி, படிப்பவர் உள்ளத்தில் புதிய உணர்ச்சிகளை ஊட்டும் நாவல்கள் அவர்களுடையவை. 'கள்ளோ காவியமோ', அகல் விளக்கு’, ‘கரித் துண்டு’, ‘கயமை', மு. வரதராசனின் நாவல்களில் குறிக்கத்தக்கவை.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 292

ஆராய்ச்சி நூல்கள் எழுதித் தமிழ் உரைநடையில் தெளிவும் எளிமையும் சேர்ந்து வளர உதவியவர்கள் மா. இராசமாணிக்கம், சாமி. சிதம்பரனார், மு. அருணாசலம், மு. வரதராசன், வெள்ளைவாரணர், அ. மு. பரமசிவானந்தம், வேங்கடராம செட்டியார் முதலியவர்கள். உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றியவர்கள் துரை. அரங்கசாமி, கா. அப்பாத் துரை, வ. சுப. மாணிக்கம், இராமநாதன் செட்டியார் முதலானோர்.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 330

திருக்குறளைப் பற்றிக் கணக்கற்ற நூல்கள் வெளி வந்துள்ளன. திரு. வி. க., நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் முதலியோரின் புதிய உரைகளும் வெளியாகியுள்ளன. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசன், கோதண்டபாணி பிள்ளை முதலியோரின் ஆராய்ச்சி நூல்களும் இங்குக் குறிப்பிடத்தகுந்தவை.

- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 331.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/11&oldid=1234677" இலிருந்து மீள்விக்கப்பட்டது