பக்கம்:அறவோர் மு. வ.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 109

இளங்கோ: வில்லவன் கோதை உங்களுக்குச் சொல்வதாக.

சேரன்: ஆமாம். இருந்தாலும் உன் கருத்துத்தானே? உன் காவியத்தில் வரும் வில்லவன் கோதை நீ தானே?

இளங்கோ: (புன்முறுவலுடன்) ஒரு வகையில் உண்மை தான் அண்ணா?

சேரன்: அந்த மூன்று அடிகளுக்கு என்ன பொருள்?

இளங்கோ: பொருள் வெளிப்படைதானே அண்ணா. மயக்கத்திற்கு இடம் இல்லையே.

சேரன்: உலகத்தையே தமிழ்நாடாக ஆக்கக் கருதினால் அது முடியும் என்று எழுதியிருக்கிறாய் தமிழ்நாடு ஆக்குவது என்றால் எப்படி?

இளங்கோ: நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள் அண்ணா?

சேரன்: உலகத்தை வென்று என் ஆட்சிக்கு உட்படுத்தல் என்று கருதினேன். ஆனால்.

இளங்கோ: அண்ணி என்ன சொன்னார்கள்?

சேரன்: உலகத்தை வென்று, தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் அங்கெல்லாம் பரப்பி, மற்ற நாட்டு மக்களையும் தமிழர்களாக்கி, தமிழ் நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தல் என்று வேண்மாள் கூறினாள்.

இளங்கோ: அண்ணியின் கருத்தே அழகான பொருள் அண்ணா?

o o o

இளங்கோ: திருவள்ளுவர் போன்ற பெருமக்களையும் உன்னையும் என்னையும் வளர்த்துப் பண்படுத்தும் தாய்மொழியாகிய தமிழையும் இந்தத் தமிழ் நாட்டையும் நினைத்துத்தான் வருந்துகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/112&oldid=1224009" இலிருந்து மீள்விக்கப்பட்டது