பக்கம்:அறவோர் மு. வ.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

111

களின் ஆர்வமும் ஊக்கமுமே இந்நூல் வெளிவரக் காரணம்’...

என்று குறிப்பிடுகின்றார்; அவர் பணிபுரிந்த பச்சையப்பன் கல்லூரியில் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்நாடகங்கள் நல்ல புகழை ஈட்டின.

'அல்லி' என்னும் புதினம் 1955 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 'டாக்டர் அல்லி’ என்னும் தலைப்பினில் மேடைக்கு ஏற்ப திரு டி. கே. கணபதி என்பவரால் நாடகம் வடிவம் பெற்றது. இதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு. நவம்பர்த் திங்கள் 'காதல் எங்கே' என்னும் தலைப்பினில் ஒரங்கநாடக நூல் தொகுதி வெளிவந்தது. ஐந்தாவதாக வெளிவந்த இந்நாடக நூலின் முன்னுரையில் டாக்டர் மு. வ.

ஒரே துறையில் அமைந்த மூன்று ஒரங்க நாடகங்கள்: ஆயினும் வெவ்வேறு கோணங்களிலிருந்து இன்றைய திருமணச் சிக்கல்களையும் அவற்றின் காரணங் களையும் புலப்படுத்துவன.

என்று குறிப்பிடுகின்றார். இத்தொகுதியில் 1. காதல் எங்கே? 2. கடமை எங்கே? 3. நன்மை எங்கே? என்னும் தலைப்புகளில் மூன்று நாடகங்கள் காணப்பெறுகின்றன. இளைஞர்களின் உள்ளங்களை நன்கு ஆராய்கின்றது; உண்மையாகக் காதல் கொண்டவர்கள் கூட மிகுதியாகப் பொருள் வருமானால் மனத்தை மாற்றிக் கொள்கின்றனர். என்று கூறுகின்றது; உறுதியான உள்ளம் இன்மையால் சிறு ஆசைகளுக்கு இரையாகின்றனர் என்று தெளிவாக்குகின்றது; மேலும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் அவலம் புலப்படுத்தப்படுகின்றது.

'மூன்று நாடகங்கள்' என்னும் தலைப்பினில் 1960 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் வெளிவந்த நாடகத் தொகுதியே கடைசியாக வெளிவந்ததாகும். இதனுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/114&oldid=1462057" இலிருந்து மீள்விக்கப்பட்டது