பக்கம்:அறவோர் மு. வ.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டாம் பகுதி

I

என் பார்வையில் - டாக்டர் மு. வ.

"வாழ்க்கை மிகப்பெரிய கலை. அதில் தேர்தல் கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நாம் செய்யத்தக்க நல்ல தொண்டு. எப்படி எனின் நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு, நாம் ஒரு நூலாகப் பயன்படுவோம்".

இவ்வாறு தம் மாணவர் ஒருவர்க்கு 1959 ஆம் ஆண்டில் கடிதம் எழுதியவர் என் பேராசான் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் ஆவர்.

தம் வாழ்க்கை குறித்து அவரே ஓர் இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

என் வாழ்க்கை படிப்படியான முன்னேற்றங்கள் உடையது. திடீர் மாற்றங்களோ சரிவுகளோ இல்லாதது. வடஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்துாரில் பிறந்தேன்... பாட்டனார் உழவர், பெரியதனக்காரர். தந்தை வியாபாரம் செய்தவர். நானே குடும்ப வட்டாரத்தில் முதல் பட்டதாரி."

'உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்னும் பழமொழிக்கேற்பத் தம்முடைய அரிய உழைப்பால்,


8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/120&oldid=1224161" இலிருந்து மீள்விக்கப்பட்டது