பக்கம்:அறவோர் மு. வ.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அறவோர் மு. வ.

அயராத முயற்சியால் தன்னைத் தலையாகச் செய்து கொண்டவர் டாக்டர் மு.வரதராசனார் ஆவர்.

வேலம் என்னும் சிற்றுார், வடார்க்காடு மாவட்டம் வாலாசாபேட்டை நகருக்கு அருகே அழகுற நிமிர்ந்து நிற்கிறது. அச் சிற்றுாரிற் பிறந்த மு. வ. அவர்கட்குச் சங்கப் புலவர் போன்று இயற்கையில் இணையிலாத ஈடுபாடு இருந்தது. தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார் தமிழ்ப் பெருமக்கள் இயற்கைக் காட்சிகளில் மனந்தோய்ந்து ஈடுபட வேண்டிய இன்றியமையாமையை வற்புறுத்துவார்.

"மனிதன் இயற்கையோடு உறவாடல் வேண்டும். காடுகளிலும் மலைகளிலும் புகுந்து ஆங்காங்குள்ள இயற்கை வனப்பைக் கண்டு கண்டு மகிழ்தல் வேண்டும். செடிகளின் அழகும், கொடிகளின் அழகும், பூக்களின் அழகும், பறவைகளின் அழகும், பிற அழகுகளும் அடிக்கடி மனத்திற் படிவதால் உடலில் அழகரும்பும். கடலோரத் தமர்ந்து கடலைக் காணக் காண மகிழ்ச்சி பொங்கும். வானத்தை, நோக்கினால் அழகிய நீல நிறமும், விண்மீன்களும், திங்களும் மகிழ்ச்சியூட்டும். மகிழ்ச்சி அழகை வளர்க்கும். ஆதலால் மனிதன் என்றும் இயற்கை வாழ்வை விரும்புதல் வேண்டும்’ என்பது திரு. வி. க. கண்ட தெளிவாகும்.

தொடக்க நாட்களில் மு. வ. அவர்களைத் திரு. வி. க. கண்டவுடன், அவர் பார்வையில் மு. வ. பட்ட நிலையினை திரு. வி. க. அவர்களின் மணிமொழி கொண்டே தெரியலாம்.

"வாலாஜா, இராணிப்பேட்டை, வேலூர், வெட்டு வானம் முதலிய இடங்கட்கு யான் அடிக்கடி செல்வேன்; கூட்டங்களில் யான் மு. வரதராஜனாரைப் பார்ப்பேன், அவர் என்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பார். பின்னர் நாங்கள் நெருங்கிப் பழகினோம். வரதராஜனார் முக அமைப்பு என் மூளைக்கு வேலை அளித்தது. அதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/121&oldid=1244217" இலிருந்து மீள்விக்கப்பட்டது