பக்கம்:அறவோர் மு. வ.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அறவோர் மு. வ.

வேண்டும் என்பர். முடிவு நம்மைச் சிந்திக்க வைத்து நம் வாழ்வைச் சிறக்க வைப்பதாக இருக்கவேண்டும் என்பர். அம் முறையில் ‘கண்ணகி’ என்னும் இலக்கிய நூலின் தொடக்கம் இவ்வாறு அமைகின்றது.

“ஏறக்குறைய ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் மதுரை மாநகரத்தின் ஒரு பகுதியில் ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது. இந்த ஊரில் கற்புடைய பெண்கள் இல்லையா? அருளுடைய சான்றோர் இல்லையா? அறங்காக்கும் தெய்வமும் இல்லையா? என்று அழுது அரற்றுவது கேட்டது”

என்று சிறுகதைப் போக்கின் சிறந்த உத்தியினைக் கையாண்டு, நூல் படிப்போரின் கவனத்தினைக் காந்தமெனக் கவர்கிறார் மு.வ.

தமிழ் நாட்டுப் பதிப்பக வரலாற்றில் இதுகாறும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ என்பது பலரும் அறிந்த செய்தியே. பத்து லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள ஒரே தமிழ் நூல் அது.

‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ மு. வ. அவர்கள் எழுதிய மிக உயரிய நூல். தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்கள் வாக்கிற் சொல்லவேண்டும் என்று சொன்னால், ‘உலகம் ஒரு குலமாதல் வேண்டும்’ என்னும் உயர்ந்த உணர்வே திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்றும் நூலைப் படைக்க வைத்தது’ எனலாம்.

மு.வ. அவர்கள் திருப்பெயர் ஒளிர வகை செய்தது. படைப்பிலக்கியத் துறையே எனலாம். ‘செந்தாமரை’ என்னும் முதல் நாவலை எழுதி முடித்துப் பொருள் முட்டுப் பாட்டால் வெளியிட முடியாமல் மு. வ. அவர்கள் திணறிய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/129&oldid=1224200" இலிருந்து மீள்விக்கப்பட்டது