பக்கம்:அறவோர் மு. வ.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

127

பொழுது, அவருக்கு அமைந்த அருமை வாழ்க்கைத் துணைவியார் எங்கள் மதிப்பிற்குரிய இராதா அம்மா அவர்கள் தாம், தம் நகைகளைக் கழற்றித் தந்து நூல் வெளியிட உதவி செய்தார்கள். செந்தாமரை 1948 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ‘கள்ளோ காவியமோ’ அவருக்குப் புகழ் சேர்த்த நாவல். இந் நாவலைப் படித்துவிட்டு மணமக்கள் பலர் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ்வதாக அவர் அமரராகிப் பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும் எனக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

“காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வே ண் டு ம். குழந்தைபோல் வாழவேண்டும்! தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு அயுள் வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது. அறிவும் மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவர்க்குத் தெரியாத அன்பு வாழ்வு-கண்மூடி வாழ்வு வேண்டும்”

என்பார் மு.வ.

“இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும். ஈ எறும்பாலும் முடியும் தேவையானபோது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே வந்து மொய்க்கின்றன. அதுபோல் இன்பம் உள்ளவரை யார் வேண்டுமானாலும் வந்து மொய்த்துக் கொள்வார்கள். ஆதலால் இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத் தேடு. உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித்தான் தேட வேண்டும்.”

இஃது ‘அல்லி’ என்னும் நாவலின் உள்ளீடான கருத்தாகும்.

“தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் வாழ்ந்தால் போதாது; வல்லவர்களாகவும் வாழவேண்டும்” என்பது: மு.வ. தமிழர்களுக்கு விடுத்த செய்தியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/130&oldid=1224201" இலிருந்து மீள்விக்கப்பட்டது