பக்கம்:அறவோர் மு. வ.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அறவோர் மு. வ.

குடியிருந்து வந்தேன். என்னை முதலில் விடுவதற்கென என் வீட்டின் முகப்பில் கார் வந்து நின்றது. எல்லோரையும் என் வீட்டினுள் அழைத்தேன். அப்போது என் வீட்டில் ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு ஸ்டூல் மட்டுமே இருந்தன. மு. வ. அவர்கள் நாற்காலியில் அமர்ந்தார். அ. மு. ப. அவர்கள் ஸ்டூலில் உட்கார்ந்தார். பாஷ்யம் அவர்கள் மேசை மேல் அமர்ந்தார். இவர்கள் உட்காருவதற்குக் கூடச் சரியான இருக்கைகள் இல்லையே என என் மனத்தில் சிந்தனை ஒடியது. இதனை எவ்வாறோ மு. வ. அறிந்து கொண்டார். என்னைத் தேற்றும் போக்கில் சொன்னார் "சர். சி. வி. இராமனுக்குக் கூடத் தொடக்க நாளில் ஒரு. மேசையும் நாற்காலியும் மட்டுமே இருந்தன. உனக்கோ உடன் ஒரு ஸ்டுலும் உள்ளது" என்று குறிப்பிட்டார். அம்மட்டோடன்றி மறுநாள் கல்லூரியில் என்னை அழைத்து "நேற்று உன் வீட்டில் புத்தகங்கள் வைக்கப்படுவதற்கு ஒரு 'பீரோ' இல்லாமல், மேசை மேலும் சன்னல் அருகிலும் புத்தகங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தேன். நான் தரும் பணத்தை எடுத்துக் கொண்டு போய் 'மர்ரே கம்பெனி’ ஏலத்தில், அங்கிருக்கும் சம்பந்தம் என்பவரிடம் சொல்லி நல்ல பீரோவாக ஒன்று வாங்கி வா" என்றார். அவ்வாறு. அவர் அன்போடும் அருள் உள்ளத்தோடும் வாங்கித் தத்த பீரோ இன்றும் என் இல்லத்தில் அணி செய்து வருகின்றது.

"வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியக்கூடாது” என்பார்கள். இப்பழமொழி மு. வ. அவர்களைப் பொறுத்த வரையில் முற்றிலும் உண்மையாகும். கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள், தேர்வுக் கட்டணம். செலுத்தாதவர்கள், விடுதிக் கட்டணம் செலுத்தாதவர்கள், புத்தகங்கள் வாங்க முடியாதவர்கள் ஆகிய பல. தரப்பு மாணவர்களுக்கும் அவர் பிறர் எவரும் அறியா நிலையில் உதவினார். ஆராய்ச்சிப் படிப்பிற்கெனப் பாடுபடும் மாணவர்க்கென அவர் எடுத்துக் கொண்ட அக்கறையினை இன்று எவரேனும் எடுத்துக் கொள்ள-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/135&oldid=1224208" இலிருந்து மீள்விக்கப்பட்டது