பக்கம்:அறவோர் மு. வ.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
III



சான்றோர் பெருந்தகை

1952ஆம் ஆண்டு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் ஐந்தாம் தமிழ் விழா நடைபெறுகிறது. ஒர் 'ஆட்டோகிராப்' (Autograph) நோட்டுடன் டாக்டர் மு. வ. அவர்களை அணுகுகின்றேன். அப்போது நான் 'இண்டர்மீடியட்' வகுப்பில் படிக்கும் மாணவன். பெயர், ஊர், படிப்பு முதலியவற்றைப் பற்றி அன்போடு விசாரிக்கிறார். உடல் நலங்காத்து உழைப்போடு படித்து முன்னுக்கு வர வேண்டுமென்று வாழ்த்தி 'ஆட்டோ கிராபி'ல் தம் கையெழுத்திட்டுத் தருகிறார்.

அன்று, இலங்கை அமைச்சர் திரு. சு. நடேசன் அவர்கள் தலைமையில் 'சங்க இலக்கியம்’ என்ற பொருள் பற்றிப் பேசுகிறார். பாமரர் உலகும் பண்டிதர் உலகும் ஒருங்கே மகிழும் வண்ணம் அவர் பேச்சு அனைவரையும் இழுக்கின்றது. மாணவர்கள் அவர் பேச்சில் மயக்கங் கொள்கிறார்கள். தலைவர் நடேசனார் 'தமிழ்நாட்டின் இலக்கிய நோபல் பரிசாளர்' என்று மு. வ. அவர்களை அவையோருக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து 1954ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அவரிடமே தமிழ் பயிலும் பேறு பெறும் மாணவன் ஆகும் வாய்ப்புப் பெறுவேன் என்று யான் கனவிலும் நினைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/137&oldid=1224210" இலிருந்து மீள்விக்கப்பட்டது