பக்கம்:அறவோர் மு. வ.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

141

அப்பா அவர்கள் பச்சையப்பன் பணியினை 1939 ஆம் ஆண்டில் ஏற்றபோது தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் மோசூர் கந்தசாமி முதலியார் அவர்கள் ஆவர். இவர் ஆங்கிலமும் அருந்தமிழும் பாங்குறப் பயின்றவர்: நகைச்சுவையோடு பேசுதலில் வல்லவர். அப்பா அவர்களிடத்தில் பேரன்பும் பெருமதிப்பும் வாய்ந்தவர். 'முதலியார் ' என்று அன்பொழுக அழைப்பார். தமிழ்த் துறைப் பொறுப்பையெல்லாம் கவனிக்கச் சொல்வார். மதியம் உண்ண வீட்டிலிருந்து எல்லோருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்து தருவார். அப்பா அவர்களை 'மூலவர்’ என்றும் குறிப்பிடுவார். அவரின்றித் தமிழ்த்துறையின் எப்பணிகளும் நடைபெறா. இவர்கள் வற்புறுத்தலின் பேரில் 'கீழ்ப்பாய்ச்சு ' கட்டி, தலைப்பாகை அணிந்து, சந்தனப்பொட்டு இட்டு வருவார். திரு. வி. க. அவர்களிடத்தில் மோசூர் கந்தசாமி முதலியார் அவர்களுக்கு ஈடுபாடு இருந்ததில்லை. ஆயினும் இவ் இரு வ ர் களிடத்திலும் நன்கு பழகியவர் அப்பா அவர்கள். வேற்றுமை மனப்பான்மையுடையார் இருவரிடையேயும் நட்பு காத்த நல்லவர் எங்கள் அப்பா. ஒருவர் பேசுவதை மற்றவரிடம் சொல்லிக் கலகம் விளைவிக்கும் பண்பு அப்பாவிடம் எந்த நாளும் இல்லை. வேண்டாதவர்களுக்கும் வேண்டியன செய்யும் அருள் உள்ளம் இவர்களிடம் என்றும் உண்டு.



கல்லூரி நாட்களில் அப்பா அவர்கள் கணக்கற்ற மாணவர்களுக்குப் பொருளுதவி செய்திருக்கிறார்கள். கல்லூரிச் சம்பளம் கட்டாமையினால் ஒரு மாணவர் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அதனை அறிய வந்தால் அந்த மாணவரும் அதனை அறியாவகையில், சம்பளத்தைக் கல்லூரி அலுவலகத்தில் தாமே கட்டி விடுவார். இதனைப் பின்னர் அம்மாணவர் அறிந்து அவரிடம் சென்றால், பணத்தைத் திருப்பித் தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/144&oldid=1244205" இலிருந்து மீள்விக்கப்பட்டது