பக்கம்:அறவோர் மு. வ.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

151

படம் தமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது." என்று மறுமொழி இறுத்தார்.

அதே ஆண்டில் கடித இலக்கியத் தொடர் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய நூல்களில் இதுகாறும் பத்து லட்சம் படிகளுக்குமேல் விற்பனையாகியுள்ள ‘திருக்குறள் தெளிவுரை’ யினையடுத்து, அதிகப்படிகள் விற்றுள்ளவை அவர் கடித இலக்கிய நூல்களே. இதனை அவரே குறிப்பிட்டு நான் கேட்டிருக்கிறேன். 'சின்னஞ்சிறு நூல்கள்; விலைமலிவு: திருமணத்திற்கு அன்பளிப்பாக வழங்க ஏற்ற நூல்கள்’ என்னுந்தகுதிகளும், அந்நூல்களில் இடம் பெற்றிருக்கும் நல்ல வாழ்வியற் கருத்துகளும் இந்நிலைக்குக் காரணங்களாக அமையலாம். மேலும் அவரின்கீழ் டாக்டர் பட்ட ஆய்வு செய்த மாணவர் கவிஞர் திரு. மா. செல்வராசன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக அண்மைக் கால வெளியீடான 'இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்' எனும் கருத்தரங்கக் கட்டுரை நூலின்கண் அமைந்துள்ள 'டாக்டர் மு. வ. வின் கடிதங்கள்’ எனும் தம் கட்டுரையொன்றில் ‘உலகளாவிய தலைசிறந்த சிந்தனையாளர் என மு. வ. வை உறுதிப்படுத்துகிற அதே நேரத்தில் தமிழினம், தமிழ்மொழி, தமிழ்நாடு என்ற மூன்று பெருமிதங்களையும் துறக்க விரும்பாதவர் அவர் என்பதையும் உரைத்தாக வேண்டும். அந்த உணர்ச்சிகள் இந்த ஐந்து நூல்களிலும் தலைசிறந்து விளங்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். ஆம்; இது உண்மையே! இந் நூல்களைப் படிக்கும்பொழுது எவரும் 'நாம் தமிழர்; நம் மொழி தமிழ்: நம் தாயகம் தமிழ்நாடு' என்ற பெருமித உணர்ச்சியினைப் பெறுவர் என்பது திண்ணம்.

இனி, அவர் எழுதி 1950ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள 'தங்கைக்கு’ எனும் நூலே, அவர்தம் கடித இலக்கிய வரிசை நூல்களல் முடிமணியான நூலாகயான் கருதுவதனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/154&oldid=1239026" இலிருந்து மீள்விக்கப்பட்டது