பக்கம்:அறவோர் மு. வ.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அறவோர் மு. வ.

முதலாவதாக என் ஆய்வினுக்கு அந்நூலினை எடுத்துக் கொள்ள முன்வந்தேன். அவர் எழுதிய நூல்களில் எந்நூலினை எவரொருவர் படிக்காமற் போனாலும், இந் நூலினைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறுவேன். திருமணம் ஆன ஒரு பெண், தன் வாழ்க்கையில் வழுக்கி விழாமல், தன் வாழ்வை வளப்படுத்தி வாழ வகைசெய்யும் முறையில் இந்நூல் அழகுற அமைந்து பொலிகின்றது.

இனி, நூலின்கண் நுழைந்து, நூலுள் பொதுளும் நுண் மாண் நுழைபுலக் கருத்துகளைக் காண்போமாக.

நூலின் நோக்கம் - முன்னுரை - நூலின் அமைப்பு

'அன்புள்ள தங்கை’ என்று தொடங்கி, 'உன் அன்புள்ள அண்ணன் வளவன்’ என்று நூலில் அமைந்துள்ள எட்டு மடல்களும் முடிகின்றன. 80 பக்கங்கள் கொண்ட இந்நூல் முழுதும் 'வையத்துள் வாழ்வாங்கு வாழ' மகளிர் போற்றிப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் யாவை என்பது நன்கு உணர்த்தப்படுகின்றது. நேருக்கு நேர் நின்று உணர்ச்சியுடன் பேசிக் கொள்வது போன்று இக்கடிதங்கள் அமைந்துள்ளன.

இந்நூலில் இடம்பெறும் அல்லது குறிப்பிடப்பெறும் மாந்தர்

காந்தியடிகளும் கஸ்துரிபா அம்மையாரும் பலவிடங்களிலும் குறிப்பிடப் பெறுகிறார்கள். மற்றும் குறிப்பிடப்பெறுவோர் குயூரி அம்மையார், பக்கத்துத்தெரு வழக்கறிஞர் மகள் கனகா, எச். ஜி. வெல்ஸ்ஸின் மனைவி, நண்பர் அருளப்பர் நண்பர் முருகையா”, தேவசுந்தரி”, தேவசுந்தரியின் தமக்கை, ! நண்பரி அருளப்பரின் தம்பி”, நண்பன் ஒருவன்’, அண்ணிக்குத் தெரிந்த மனைவி முதலியவர்களோடு 'ஆ' என்று முதல் எழுத்தால் குறிக்கப்பெற்ற ஒரு பெண்ணும் இடம் பெறு இன்றனர். இவர்களன்றி அண்ணியும் ‘ பெரியம்மாவும் அடிக்கடி குறிப்பிடப்பெறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/155&oldid=1224236" இலிருந்து மீள்விக்கப்பட்டது