பக்கம்:அறவோர் மு. வ.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

155

துறைகளிலும் கணவனுக்கு இயைந்து நடப்பது நல்லது. ஆனால் குதிரைப் பந்தயம் அவருக்கு விருப்பமானதாக இருந்தால் என்ன செய்வது? கிண்டி விளையாட்டால் உள்ளதெல்லாம் இழந்து ஒட்டாண்டியாகிக் குடும்பம் அழிவதைவிட, அவருடைய மனத்தை மகிழ்விக்காமல் நின்று வெறுப்பைத் தேடிக் கொள்வதே நல்லது அல்லவா? அப்போதும் அவரைக் கிண்டிக்கு அனுப்பாதபடி அன்பால் அவர் மனத்தை மாற்றுதல் நல்லது; முடியாதபோது அவருடைய வெறுப்பை வரவேற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுவது கடமை அல்லவா? இல்வாழ்க்கைக்காகப் பொறுமை; ஆனால் அந்தப் பொறுமையால் இல் வாழ்க்கை கெடுவதானால்-? உடம்புக்காக உணவு; அந்த உணவால் உடம்பு அழிவதானால், பட்டினியைப் போற்ற வேண்டாமா? "20

பெண்ணின் வளர்ச்சிப் பெருமை

"ஒரு பெண் பெற்றோரின் மகளாக உள்ள வரையில் உரிமை மிகுந்தவளாக அரசிளங்குமரியாகவே வாழ்கிறாள். கணவனின் மனைவியாக வாழத் தொடங்கியதும் அரசியாகவும் அடிமையாகவும் மாறி மாறி வாழ்வதுபோல் விளங்குகிறாள். தான் பெற்ற மக்களின் தாயாக வாழும் போது எல்லா உரிமைகளையும் உதறிவிட்டு அன்புருவாக உயர்கிறாள். பிடிவாதம் செய்யும் ஒரு பெண்ண்மை இயற்கை இப்படி மாற்றி மாற்றித் தியாகத்தின் திருவுருவாகச் செய்கின்றது."21

பெண்ணின் படிப்படியான வாழ்வியல் வளர்ச்சியினை இவ்வாறு திறம்படக் குறிப்பிடுகின்றார்.

கற்பு பற்றிய கருத்து

"வாழ்நாள் வரை மாறாத அன்புடன் ஒரு நெறியாக வாழும் வாழ்க்கையைத் தான் முன்னோர்கள் கற்பு என்று சொன்னார்கள்".29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/158&oldid=1224239" இலிருந்து மீள்விக்கப்பட்டது