பக்கம்:அறவோர் மு. வ.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

159


ஆசிரியர் கூற்று

சில விடங்களில் ஆசிரியர் தாமே நேர் நின்று அறவுரை பகர்கிறார்.

(அ) "ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல், உணவு உடை தொழில் கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை எ ல்லோர்க்கும் அமைத்துத் தருதல் இவைகளைச் செய்யக் காலம் ஆனாலும் ஆகட்டும். போட்டிக்கும் பூசலுக்கும் குறைகளுக்கும் குற்றங்களுக்கும் வழி அமைத்துத் தருகின்ற இந்த ஆடம்பரங்களையாவது தடுக்கலாமே! இதற்கு ஒரு சட்டம் பிறப்பிக்க ஒருவர் துணிவாரானால், அவரைத்தான் நாட்டின் முதல் தொண்டர் என்று நான் போற்றுவேன்."34

(ஆ) "எந்த அளவிற்கு ஆடம்பர ஏணியில் ஏறி நிற்க முடியும் என்றுதான் பெண்கள் முயல்கின்றார்கள். ஆடம்பரப் போக்கு இல்லையானால், தங்களுக்கு உலகத்தில் மதிப்பு இல்லை என்று எண்ணும் தாழ்வு மனப்பான்மை பெண்கள் பலரிடம் இயல்பாக உள்ளது. இதுதான் உண்மையான பிற்போக்கு என்பது என் கருத்து."35

(இ) அழகைக் காக்கும் வழிகள்: முரட்டு உழைப்பும் முரட்டு உணவும் அழகுக்குப் பகை என்பதோடு, இயைபு இல்லாமல் உடல் பருத்து வளர்வதும் அழகுக்குப் பகை என்று கூறி, அதனைக் களைய "உழைப்பு இல்லாமல் இருக்கக்கூடாது, களைப்பு உண்டாகுமாறு உழைக்கக் கூடாது, தசைநார் திரட்சி பெறுமாறு வன்மையான பயிற்சிகள் செய்யக்கூடாது. குடலில் ஊறிப் புளிக்கும் நிலையை வளர்த்துக்கொள்ளலாகாது. மென்மையான சுவையுள்ள உணவுகளை அளவுபடுத்தி உண்ண வேண்டும். மந்தப் பொருள்களை மிகுதியாக உண்ணலாகாது"36 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/162&oldid=1224288" இலிருந்து மீள்விக்கப்பட்டது