பக்கம்:அறவோர் மு. வ.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

அறவோர் மு. வ.


ஆசிரியரின் உளநூல் நுட்பம்

ஆசிரியர் பிறர் உள்ளத்தினை ஊடுருவிக் காணும் நுட்பம் வாய்ந்தவர். நாவலாசிரியர் தாம் படைக்கும் கதை மாந்தர்தம் உள்ளத்து உணர்வுகளைத் தாமும் உற்றும் பெற்றும் நிற்க வேண்டும். தலைசிறந்த சிந்தனையாளரும், கல்வியாளரும், நாவலாசிரியருமான டாக்டர் மு. வ. அவர்கள் தம் வாழ்வில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதில், விளையாடுவதில் ஆர்வம் மிகக் காட்டியவர். தம் வாழ்நாளின் இறுதி நாட்களில் கூட இப்பண்பினைத் துறக்கவில்லை என்பதற்குச் சான்றுகள் பலவுண்டு. குழந்தை பற்றி எழுதும்பொழுது அவரும் குழந்தையாகிவிடுவார். 'குழந்தை' என்றே ஒரு நூலும் அவர் எழுதி உயிருப்பதும் இவ்வுண்மையினை உணர்த்தும். 'குழந்தை மொழி' என 'மொழி வரலாறு’ எனும் நூலில் அவர் அமைத்துள்ள ஒரு கட்டுரையினைக் காண்க.

பெண்கள் குழந்தைகளிடம் பழகும் முறையினைப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

"குழந்தைகளுக்கு அறநூல்களைத் திணிப்பதைவிட, அறிவுரைகளைக் கூறுவதைவிட, அவர்கள் பின்பற்றத் தக்க வழியில் நாம் வாழ்வதுதான் நல்லது என்று உளநூல் தெளிந்த அறிஞர்கள் கூறுவார்கள். அறவுரைகளும் அறிவுரைகளும் வற்புறுத்தி ஊட்டும் உணவு போன்றவை; அவை நன்றாகச் செரிப்பதில்லை. பெரியோரின் நடக்கை அப்படி அல்ல; குழந்தைகள் தாமே விரும்பி உண்ணும் பழம் போன்றது அது. அது எளிதில் உள்ளத்தில் பதிந்து விடும் என்பார்கள். ஆகவே, பெண்கள் குளிர்ந்த உள்ளத்தோடு மலர்ந்த முகத்தோடு இனிய சொற்களோடு குழந்தைகளிடம் பழகுவார்களானால், அதுவே குழந்தைகளுக்குக் கற்பிக்கும் சிறந்த கல்வியாகும். அதுவே பெரிய தொண்டு; எத்தனையோ பேரைத் திருத்தும் ஒப்பற்ற-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/163&oldid=1224290" இலிருந்து மீள்விக்கப்பட்டது