பக்கம்:அறவோர் மு. வ.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

161

தொண்டு; பத்திரிகைகளும் கட்சிகளும் புகழ வேண்டாத அரிய தொண்டு."37

காந்தியும் கஸ்தூரிபாவும் போற்றப்பெறல்

அ ண் ண ல் காந்தியடிகளாரிடத்தும், அன்னை கஸ்துாரிபா அவர்களிடத்தும் தாம் கொண்ட ஈடுபாட்டினை ஆசிரியர் பின்வரும் பகுதியால் புலப்படுத்துகின்றார்:

"காந்தியடிகள் இந்த நாட்டில் எவ்வளவு பெரிய போராட்டம் எத்தனை முறை நடத்தியிருக்கிறார்! வரலாற்றில் அதற்கு இணை இல்லை. ஆயினும் எவ்வளவு தெளிவும் துணிவும் அவருக்கு இருந்தன. சத்தியத்திற்காக அஹிம்ஸைக்காக நாட்டின் விடுதலையையும் பொருட்படுத்தாதிருக்கத் துணிந்த நெருக்கடிகள் பல; நாட்டின் விடுதலைக்காகத் தம் அமைதியையும் குடும்ப நன்மையையும் கைவிடத் துணிந்த நெருக்கடிகள் கண்டு, உடனுக்குடன் துணிந்து செயலாற்றிய வீரருள் வீரர் அவர்.”38

"நாம் குடும்பத்தோடு பூனாவுக்குப் போயிருந்தபோது ஆகாகான் அரண்மனையை அடுத்த பூங்காவில் கஸ்தூரிபாவின் சமாதியின் அருகே இருந்து உருகியது உன் நினைவில் இருக்கும். அப்போது அப்பா அம்மாவை நோக்கிச் சொன்ன சொற்கள் நினைவில் இருக்கின்றனவா? "இந்த அம்மாவின் கணவர் காந்தியடிகள் உலகத் தலைவர். கணவரின் வழியைக் கண்மூடிப் பின்பற்றிய உத்தமி இவர் இந்த அம்மாவைப் போல் எளிய வாழ்க்கை வாழ எந்தப் பெண்ணாலும் முடியாது. கணவர் உலகத் தலைவர். உலகத் தலைவரின் மனைவி, பருத்திப் புடைவையும் சங்கு வளையலும் தாலியும் தவிர, எந்த ஆடம்பரமும் அறியாமல் வாழ்ந்து விட்டு மறைந்தார்" என்று அப்போது அப்பா சொன்ன சொற்கள் இன்னும் என் செவியில் ஒலிக்கின்றன."39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/164&oldid=1224291" இலிருந்து மீள்விக்கப்பட்டது